தாய்ப் பால் ஊற பூண்டு அவசியம்
First Published : Tuesday , 13th March 2012 10:34:16 PM
Last Updated : Tuesday , 13th March 2012 10:34:16 PM
குழந்தை பெற்ற பெண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும்.
குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும் அதிகமாக உண்ண வேண்டும். எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
சுறா போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி செய்யும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. பிள்ளை பெற்ற பெண்களுக்கு தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்கின்றனர்.
பூண்டிற்கு இத்தகைய மருத்துவ குணம் இருப்பதால் பிள்ளை பெற்ற பெண்கள் பூண்டினை ஏராளமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.