tamilkurinji logo
 

சோர்வு, மூட்டு வலிக்கு செர்ரி ஜூஸ்,

சோர்வு, மூட்டு வலிக்கு செர்ரி ஜூஸ்

First Published : Monday , 5th April 2010 07:33:24 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




சோர்வு, மூட்டு வலிக்கு செர்ரி ஜூஸ்,



உடல் சோர்வு, மூட்டு வலி இருப்பவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடித்தால் நல்லது என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பிரிட்டனின் நார்தும்பிரியா யுனிவர்சிட்டியின் உளவியல் மற்றும் விளையாட்டு பயிற்சி மையத்தின் ஆய்வக இயக்குநர் கிளைன் ஹோவாட்சன் தலைமையிலான நிபுணர்கள் செர்ரி பழ ஜூஸின் பயன்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதன் ஒருபகுதியாக, மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் 20 வீரர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு பந்தய நாளுக்கு முன்னதாக 5 நாட்கள் மற்றும் பந்தயம் முடிந்த பிறகு 2 நாட்களுக்கு தினமும் 2 முறை செர்ரி ஜூஸ் கொடுக்கப்பட்டது.

ஜூஸ் குடித்தவர்கள், ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 48 மணி நேரத்தில் உடல் சோர்வு நீங்கி பழைய நிலைக்கு திரும்பியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. செர்ரி ஜூசில் உள்ள ஆந்தோசியானின்ஸ் என்ற ஆன்ட்டி ஆக்சிடன்ட் வைட்டமின், உடலின் சோர்வடைந்த தசைப்பகுதி விரைவாக புத்துணர்ச்சி பெற உதவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"பொதுவாக, மாரத்தான் போ ன்ற ஓட்டப் பந்தயங்களில் பங்கு பெறுபவர்களின் உடல் தசைகள் கடுமையாக சோர்வடையும். இனி இந்த பிரச்னையிலிருந்து எளிதாக விடுபட செர்ரி ஜூஸ் குடிக்கலாம். சாதாரணமான உடல் சோர்வு மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இது பயனளிக்கும்" என ஹோவாட்சன் கூறியுள்ளார்.



    Tags :    
சோர்வு, மூட்டு வலிக்கு செர்ரி ஜூஸ், சோர்வு, மூட்டு வலிக்கு செர்ரி ஜூஸ், சோர்வு, மூட்டு வலிக்கு செர்ரி ஜூஸ்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆ‌ப்‌பி‌ள்
ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன. மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில்

மேலும்...

 அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து

மேலும்...

 அன்னாசி
அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

மேலும்...

 கொய்யாப்பழம்
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும்.  கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும்  கொய்யாவின் பச்சைப்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in