tamilkurinji logo
 

நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை,Pasalai keerai

Pasalai,keerai


நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை

First Published : Saturday , 24th December 2011 11:07:41 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை,Pasalai keerai



கிராமங்களில் பெரும்பாலும் இக்கீரையை காணலாம். வேலிகளில் கொடியாகப் படர்ந்து பார்க்க அழகாய் இருக்கும். சிறு வெற்றிலை அளவில் தடிமனாகக் காணப்படும்.  பசலையில் இருவகை உண்டு ஒன்று கொடிப்பசலை இன்னொன்று தரைப்பசலை.

கொடிப்பசலை பச்சை நிறம் உடையது இலை பெரியதாக இருக்கும் இது கொடியாகப் படரும்.

தரைப்பசலை, தரையில் படரும் இளஞ்சிவப்பாகவும் பச்சை நிறத்திலும் காணப்படும் இதன் இலை சிறியதாக இருக்கும்.

எவ்வகை பசலையாய் இருப்பினும், எல்லாவற்றின் மருத்துவ குணமும் ஒன்றே. உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இது சத்து நிறைந்த கீரை. இதில் A,B,C ஆகிய வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. இரும்பு, புரதம், சுண்ணாம்பு ஆகிய சத்துக்களும் உள்ளன.

இவ்வளவு சத்துகள் கொண்ட இக்கீரையை அதன் வழுவழுப்பு தன்மையால் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. இது தவறு அருமையான இக்கீரையை அவ்வப்போது சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கொடிப்பசலை அதிகமாக சளியை உண்டாக்கும் என்பார்கள். எனவே இக்கீரையை சமைக்கும் போது மிளகு சீரகம் சோத்து சமைப்பது நல்லது.

இதன் மருத்துவ பயன்கள்

நீர்க் கடுப்பு நீங்க

பாசிப் பருப்புடன் இக்கீரை சமைத்து சாப்பிட்டு  வந்தால்  முத்திரக் கடுப்பு நீங்கும்.
 
வாந்தி நிற்க

இக்கீரையின் தண்ணீரை (கீரையை சமைக்கும்போது மீதமிருக்கும் ) பருகினால் வாந்தி நிற்கும் பசியின்மை குணமாகும்.

  • உடல் வளார்ச்சிக்கு மிகவும் உதவுகிறது இக்கீரை.
  • சூட்டை தணிக்கும்  பித்தத்தை குறைக்கும்.
  • நல்ல பசியைத் தரும் .
  • குழந்தைகளின் தேக வளார்ச்சிக்கு பெரும்பலன் ஆற்றுகிறது.
  • தாதுவைக் கெட்டிப்படுத்தி தாம்பத்தியத்திற்கு உதவுகிறது.
  • ஈரல் நோய்களை நீக்குகிறது.
  • மலச்சிக்கலைப் போக்கும் .
  • இரத்த சோகையைப் போக்கும்.
  • தலைவலியை நீக்கும் .



    Tags :    
நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை,Pasalai keerai நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை,Pasalai keerai நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை,Pasalai keerai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை
இது தென்னிந்தியாவில் தோட்டங்களில் பயிரிடப்படும் அருமையான கீரையாகும். இலையின் மேல்பாகம் பச்சை நிறத்திலும் கீழ்பாகம் சிவப்பும் நீலமும் கலந்ததுபோல் இருக்கும். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு பல வியாதிகளைப் போக்கும்

மேலும்...

 மணத்தக்காளி
மணத்தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் பயன்கள்:  தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும்,  தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.சிறுநீர்ப்

மேலும்...

 முருங்கைக் கீரை
முருங்கை கீரையில் எல்லா விதமான சத்துக்களும் உள்ளன. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் நல்ல வலுவும் ஆயுட்காலம் வரை கிடைக்கும் .இக்கீரையில் உள்ள மருத்துவ பலன்கள்: தாதுபலம் பெருகும் , ரத்த அழுத்த நோய் குணமாகும் ,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in