tamilkurinji logo
 

முருங்கைக் கீரை,


முருங்கைக் கீரை

First Published : Saturday , 17th July 2010 08:27:44 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM








முருங்கை கீரையில் எல்லா விதமான சத்துக்களும் உள்ளன. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் நல்ல வலுவும் ஆயுட்காலம் வரை கிடைக்கும்

.இக்கீரையில் உள்ள மருத்துவ பலன்கள்:

தாதுபலம் பெருகும் , ரத்த அழுத்த நோய் குணமாகும் , கொழுப்புச் சத்து குறையும் , நீரிழிவு நோய் குணமாகும: சர்க்கரை நோய் குறையும், காமாலை குறையும் , கண்பார்வை தெளிவாகும் ,.கபத்தை நீக்கும் , பித்த வாந்தி தீரும் , வாயு தொல்லை அகலும்

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும.

முருங்கை காய்க்கு நம் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கும் சக்தி உண்டு

முருங்கை பூவை சுத்தபடுத்தி அதை எண்ணெய் கலந்து அவித்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெறும்

இக்கீரையுடன் பாசிபருப்பை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் குழந்தைக்கு தேவையான சத்துள்ள பால் சுரக்கும்

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.

பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான்.

இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரும் வயிற்று வலி நீங்கும்.

முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். புளியை உணவில் நீக்க வேண்டும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும்.

இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். போகம் நீடிக்கும். தாதுபுஷ்டி லேகியம் தேவையில்லை.

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது சிறந்த ஊட்டம் தரும்.

முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.

முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.

இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.



    Tags :    
முருங்கைக் கீரை, முருங்கைக் கீரை, முருங்கைக் கீரை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.குறைந்தது மாதம் இரு முறையாவது

மேலும்...

 ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை
அற்புதமான மருத்தவ குணம் கொண்ட  மிகவும் சத்துள்ள கீரை இது கரிசலாங்கண்ணி இதில் இரு வகைகள் உண்டு ஒன்று மஞசள் கரிசலாங்கண்ணி கரிசாலங்கண்ணியைத்தான் சமைத்துச் சாப்பிடலாம் இது தான் சமையலுக்கு எற்றது. மஞசள்காமாலைபோக கரிசலாங்கண்ணிக்கீரையை அரைத்து சாரெடுத்து

மேலும்...

 ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை
இது தென்னிந்தியாவில் தோட்டங்களில் பயிரிடப்படும் அருமையான கீரையாகும். இலையின் மேல்பாகம் பச்சை நிறத்திலும் கீழ்பாகம் சிவப்பும் நீலமும் கலந்ததுபோல் இருக்கும். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு பல வியாதிகளைப் போக்கும்

மேலும்...

 நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை
வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை தூவினாலே வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுகிறது. இக்கீரையை  பிடுங்கி சயைலுக்கு பயன்படுத்தலாம்.அளவில் சிறியது என்றாலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in