tamilkurinji logo
 

முள்ளங்கிக் கீரை! ,


முள்ளங்கிக் கீரை!

First Published : Tuesday , 1st December 2009 12:25:34 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM







முள்ளங்கி கிழங்கின் மேல் புறம் வளர்கிற இலைதான் முள்ளங்கிக் கீரை. பொதுவாக, நாம் முள்ளங்கியைச் சமையலுக்குப் பயன்படுத்திவிட்டு, கீரையைத் தூர எறிந்துவிடுகிறோம். ஆனால், முள்ளங்கியைவிட இதன் கீரையில்தான் வைட்டமின் ஏ, பி, சி. சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்பு தொல்லை தீரும். மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு. முள்ளங்கிக் கீரையில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவை அடங்கி உள்ளன. தொடர்ந்து முள்ளங்கிக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக் குறைகளும் அகலும். முள்ளங்கியின் வேர்ப் பகுதியில் இருப்பதைப் போல ஆறு மடங்கு வைட்டமின் சி. இதன் இலைகளில் இருக்கிறது.

முள்ளங்கிக் கீரை சிலருக்கு மார்புச் சளியை உண்டாக்கலாம், உடம்பில் வாயுவை அதிகப்படுத்தலாம், இன்னும் சிலருக்கு வயிற்றில் புழுவைக்கூட உண்டாக்கலாம். எனவே, முள்ளங்கிக் கீரையை அளவோடு உண்பதே நல்லது. முள்ளங்கி இலையைப் போலவே கேரட் இலை, பாகற்காய் இலை, கோவை இலைகளிலும் வைட்ட மின்கள் இருக்கின்றன!



    Tags :    
முள்ளங்கிக் கீரை!
, முள்ளங்கிக் கீரை!
, முள்ளங்கிக் கீரை!
,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.குறைந்தது மாதம் இரு முறையாவது

மேலும்...

 ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை
அற்புதமான மருத்தவ குணம் கொண்ட  மிகவும் சத்துள்ள கீரை இது கரிசலாங்கண்ணி இதில் இரு வகைகள் உண்டு ஒன்று மஞசள் கரிசலாங்கண்ணி கரிசாலங்கண்ணியைத்தான் சமைத்துச் சாப்பிடலாம் இது தான் சமையலுக்கு எற்றது. மஞசள்காமாலைபோக கரிசலாங்கண்ணிக்கீரையை அரைத்து சாரெடுத்து

மேலும்...

 ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை
இது தென்னிந்தியாவில் தோட்டங்களில் பயிரிடப்படும் அருமையான கீரையாகும். இலையின் மேல்பாகம் பச்சை நிறத்திலும் கீழ்பாகம் சிவப்பும் நீலமும் கலந்ததுபோல் இருக்கும். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு பல வியாதிகளைப் போக்கும்

மேலும்...

 நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை
வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை தூவினாலே வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுகிறது. இக்கீரையை  பிடுங்கி சயைலுக்கு பயன்படுத்தலாம்.அளவில் சிறியது என்றாலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in