tamilkurinji logo
 

வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை,வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை gastric problem

வாயு,தொல்லையை,தடுக்கும்,உணவு,முறை,gastric,problem

வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை

First Published : Friday , 29th April 2016 12:17:51 PM
Last Updated : Friday , 29th April 2016 12:17:51 PM
வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை,வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை gastric problem* அதிக கொழுப்பு சத்து உணவு தவிர்க்கப்படவேண்டும்.

* அதிக நார்சத்தினை சிறிது காலம் தவிர்த்திட வேண்டும்.

* பொறுமையாக சாப்பிட வேண்டும். அவசரம் என்ற பெயரில் அள்ளி விழுங்குவது தவறு.

* உணவு உண்ட பின் சிறிது நேரம் நடக்க வேண்டும்.

* பழச்சாறுகள் கூட சிலருக்கு இப்பாதிப்பினை ஏற்படுத்தலாம். எனவே அதனை உணர்ந்து தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலுக்கு எளிதான சில தீர்வு முறைகள்:

* முழு தானிய உணவு மிக அவசியம். காலை உணவாக இதனை உட்கொள்வது மிகவும் நல்லது. இதோடு தினமும் சிறிதளவு பார்லியினை எந்த விதத்திலாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* நாள் ஒன்றுக்கு 5 முறை பழம், காய்கறிகள் எடுத்துக் கொள்ளுங்கள். ஆப்பிள் எப்பொழுதும் உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக் கொண்டால் நல்லது. இரண்டு வேளை உணவுக்கு நடுவே வாழைப்பழம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் பச்சை வாழைப்பழத்தை தவிர்த்திருங்கள்.

* ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சையை சாப்பாட்டிற்கு பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.


* காலையில் ஒரு கப் காபி குடலை இயக்கி கழிவுப் பொருட்களை வெளியேற்றும்.

* எள் மூலம் செய்த சிற்றுண்டிகளை உண்பது நல்லது.


* அதிக உணவை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உணவை எப்படி மெல்ல வேண்டும் :

நீங்கள் சற்று முன்பு உணவு உண்ட பொழுது எத்தனை முறை அதனை மென்று விழுங்கினீர்கள் என்று உங்களால் உறுதியாய் சொல்ல முடியுமா? மென்று தின்பதால் ஏற்படும் நன்மைகளை அறிந்தால் ஓடிக் கொண்டும், பரபரத்துக் கொண்டும் உணவை அப்படியே விழுங்குவதை விட்டு விடுவோம்.

* மென்று விழுங்கும் போது உங்கள் உணவு மிகமெல்லியதாக உடைவதால் ஜீரணம் நடைபெறுவது எளிதாகிறது. இதனால் குடலுக்கு சத்துக்களை உறிஞ்சுவது எளிதாகின்றது. செரிமானமாகாதவை ரத்தத்தில் கலப்பது தவிர்க்கப்படுகின்றது.

* அதிக நேரம் மென்று விழுங்கும் போது குறைவான அளவே உட்கொள்ள முடியும் என்பதால் எடை நன்கு குறையும்.

* உணவு வாயில் நன்கு மெல்லப்படும் போது வாயில் உமிழ் நீரில் நன்கு கலக்கின்றது. இதனால் வயிற்றின் வேலை சுமை குறைகின்றது. உமிழ் நீரில் உள்ள என்சைம்கள் கொழுப்பினை நன்கு உடைத்து விடும். உணவு விழுங்குவதும் எளிதாகின்றது.

* உணவை மெல்லுவதால் பற்கள் பலம் பெறுகின்றன.

* மெல்லப்படாத உணவு வயிற்றில் அதிக பாக்டீரியாக்களால் தாக்கப்படுகின்றன. இதுவே குடல் வீக்கம், வலி, காற்று இவற்றிற்கு காரணமாகின்றது.

* மென்று தின்னும் பொழுதே உணவை சுவைக்க முடிகின்றது.

* எனவே சிறிய அளவில் உணவினை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

* நிதானமாய் நன்கு மெல்லுங்கள்.

* வாயில் உணவு மிக மென்மையாய் இருக்க வேண்டும்.

* நன்கு விழுங்கிய பிறகே நீர் குடிக்க வேண்டும். இதுவே முறையாக உணவு உண்ணும் வகை ஆகும்.    Tags :    
வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை,வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை gastric problem வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை,வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை gastric problem வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை,வாயு தொல்லையை தடுக்கும் உணவு முறை gastric problem
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni
ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னை  உள்ளது  .இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு

மேலும்...

 கொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்
வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன.  உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர்.செடிப்பசலை என்ற இனம் உண்டு.  பசலையில்   முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம

மேலும்...

 வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்
உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.நெல்லிக்காயை பொடி செய்து, அதை சிறிதளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால்,

மேலும்...

 தோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையின் பயன்கள்
குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in