அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் காலியிடங்களுக்கு பரிந்துரை- இணையதளத்தில் பார்க்கலாம்

அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் காலியிடங்களுக்கு பரிந்துரை- இணையதளத்தில் பார்க்கலாம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவரிடமிருந்து 314 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 48 சிறுபான்மையின பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான அறிவிக்கை பெறப்பட்டது. இதற்கு கடந்த மாதம் 15-ந் தேதி நிலவரப்படி, தகுதியுள்ள வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பதிவுதாரர்களின் பெயர் பட்டியல், பதிவு மூப்பு விவரங்கள், பாடவாரியாகவும், இனவாரியாகவும் (www.tn.gov.in) என்கிற தமிழக அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

பரிந்துரை பதிவு மூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் எவரும் விடுபட்டிருப்பின், அவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை உரிய ஆதாரத்துடன் வருகிற 10-ந் தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளவேண்டும். அதன்பின் தொடர்பு கொள்பவர்களின் கோரிக்கை ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
https://goo.gl/b45fTd


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்