tamilkurinji logo


 

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்,




ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

First Published : Tuesday , 20th March 2012 09:27:57 PM
Last Updated : Tuesday , 20th March 2012 09:27:57 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்,

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் இலவச கட்டாய கல்விச் சட்டம் அமல்பட்டதன் எதிரொலியாக இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

எனவே, அரசு பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ ஏன் தனியார் பள்ளிகளில்கூட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் முதலாவது தகுதித்தேர்வினை ஜுன் மாதம் 3-ந் தேதி நடத்த உள்ளது. அன்றைய தினம் காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தனித்தனியே தகுதித்தேர்வு நடத்தப்படும்.

இந்த நிலையில், தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டமும், மாதிரி வினாத்தாளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று மாலை வெளியிடப்பட்டது. இரு தகுதித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களையும், மாதிரி வினாக்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கிடையே, தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் (டி.இ.ஓ. ஆபீஸ்) விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வுக்கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறளானிகளுக்கு ரூ.250 மட்டும்.

உரிய தேர்வுக்கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டுள்ள செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை, படிவம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஏப்ரல் 4-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால்மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் திணறுகிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பணி நியமனங்களில் 20 சதவீதம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in