ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்களை வாங்க அலைமோதும் கூட்டம்

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்களை வாங்க அலைமோதும் கூட்டம்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களை இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு வாங்கி வருகிறார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு விண்ணப்ப வினியோக மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. முதல் தகுதித்தேர்வு ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 22-ந் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பம் வழங்க தொடங்கிய முதல் நாளில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர். முதல்கட்டமாக 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன. இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுத்தீர்ந்துவிட்டன. தட்டுப்பாடு ஏற்பட்டுவிடாமல் இருக்கும் வகையில் கூடுதலாக 4 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

இதற்கிடையே, தருமபுரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களை வாங்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. விண்ணப்பம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் ஆண்களும், பெண்களும் முண்டியடித்துக்கொண்டு விண்ணப்பங்களை வாங்குகிறார்கள். ஒருசில மாவட்ட கல்வி அதிகாரி அலுவலங்களில் விண்ணப்ப தட்டுப்பாடு ஏற்பட்டது

இதைத்தொடர்ந்து, மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் தலா 25 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வந்த புகார்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

தருமபுரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்கள் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் தலா 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அனுப்பி வைத்துவிட்டோம். எனவே, இனிமேல் தட்டுப்பாடு இருக்காது.

விண்ணப்ப விநியோக மையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அதன் அருகே வேறு சில மையங்களை தற்காலிகமாக திறந்து விண்ணப்பங்களை விற்கலாம். இதற்காக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கி உள்ளோம். விண்ணப்பங்கள் விற்றுத்தீர்ந்துவிட்டால் உடனடியாக கூடுதல் விண்ணப்பங்கள் அச்சிட்டு வழங்கவும் தயார்நிலையில் இருக்கிறோம். அவசியம் ஏற்பட்டால் விண்ணப்ப விநியோக கடைசி தேதியும் நீட்டிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
https://goo.gl/QW8z1D


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்