ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து  4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பிளஸ்-2 முடித்து டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடத்துகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி காண வேண்டும்.

இத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தகுதித்தேர்வு ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்த 22ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது.  விண்ணப்பிக்க 4ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் தயாராகி வருகிறார்கள். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதியது. முதல் கட்டமாக 4 லட்சம் விண்ணப்ப படிவம் அச்சடித்து வழங்கப்பட்டது. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்பனையானது. இதையடுத்து விண்ணப்ப விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மேலும் 8 லட்சம் விண்ணப்பம் அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 16 லட்சம் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தொடர்ந்து விண்ணப்பம் வாங்கி செல்வதால் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்க தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 4ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
https://goo.gl/Bt5Wpr


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்