tamilkurinji logo


 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்,




ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

First Published : Thursday , 5th January 2012 09:39:12 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்,

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு (2011-12) மொத்தம் 24 ஆயிரத்து 17 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் நியமனப் பணிகளை பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 55 ஆயிரம் பேர் இந்த ஆண்டு நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, "அனைவருக்கும் இடைநிலைக் கல்வி" எனும் திட்டத்தின் கீழ் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க உத்தரவிடப்பட்டது.
இவற்றில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் மாவட்ட அளவில் இப்போது நடைபெற்று வருகின்றன.

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மீதமுள்ள பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறையால் அடுத்தகட்டமாக நிரப்பப்படும் எனத் தெரிகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் எவ்வளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. தமிழக அரசின் உத்தரவின் மூலம் மொத்தம் 24,017 ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் எழுத்துத் தேர்வின் மூலம் நியமிக்கப்படுவர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பின் அடிப்படையில் நியமிக்கப்படுவர்.
.
இந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு மொத்தம் 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 8-ம் தேதி நடைபெற இருந்தது. பின்னர் இந்தத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்வு பிப்ரவரி 19 அல்லது 26-ம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்துக்காக 34 மூத்த விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். இப்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பொறியியல் கல்லூரிகளுக்கு 156 உதவிப் பேராசிரியர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரலில் நடைபெறும் எனத் தெரிகிறது.

நியமிக்கப்பட உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை:

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் - 2,895
பட்டதாரி ஆசிரியர்கள் - 14,761
இடைநிலை ஆசிரியர்கள் - 5,451
சிறுபான்மை பாட ஆசிரியர்கள் - 32
உடற்கல்வி ஆசிரியர்கள் - 687
தையற்கலை ஆசிரியர்கள் - 47
இசை ஆசிரியர்கள் - 41
ஓவிய ஆசிரியர்கள் - 78
விவசாய ஆசிரியர்கள் - 25
மொத்தம் - 24,017

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in