tamilkurinji logo


 

ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை,
ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை

First Published : Friday , 13th January 2012 07:05:40 AM
Last Updated : Friday , 13th January 2012 07:05:40 AM


ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை,

இது தென்னிந்தியாவில் தோட்டங்களில் பயிரிடப்படும் அருமையான கீரையாகும். இலையின் மேல்பாகம் பச்சை நிறத்திலும் கீழ்பாகம் சிவப்பும் நீலமும் கலந்ததுபோல் இருக்கும். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. அரைக்கீரையைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம் கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயல்பு கொண்டது.

வாயு நீங்க

இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞசி, பச்சை மிளகாய், இவைகளைச் சோத்துச் கடைந்து சாதத்துடன் சோத்து தினசரி உண்போர்க்கு வாயுத் தொந்தரவுகள் நீங்கிவிடும்.

உடல் வலி போக

சிலருக்கு கெபஞ்சம் வேலை செய்தாலும் உடம்பெல்லாம் வலி எடுக்கும், இவர்கள் அரைக்கீரை மிளகு, பூண்டு, பெருங்காயம், சுக்கு, இவைகளை அரைக்கீரையோட சோத்துச் பொரியல் செய்து தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டுவந்தால் உடல்வலி போகும்.

சளி இருமல் குணமாக

கீரையுடன் அதிக அளவில் வெள்ளைப் பூண்டை சோத்துக் கடைந்து தினசரி சாப்பிட்டு வந்தால் சளி இருமல் நீங்கும்.

வாய் ருசிக்கு

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு ருசியே தெரியாது. இப்படிப்பட்டவர்களுக்கு அரைக்கீரையோடு புளியையும் சோத்துச் கடைந்து ஒரு வாரத்திற்கு மதிய வேளையில் சாப்பிட்டுவந்தால் நாளடைவில் ருசி தெரியவரும்.

பசி எடுக்க

சிலருக்கு பசியே எடுக்காது. இப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு சீரகத்தைச் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டுவந்தால் நாளடைவில் பசியெடுக்கும். கடைந்த கீரையை சாப்பாட்டிற்கு முண் சாப்பிடுவது நல்லது.

பிரசவித்த பெணகள் பலம் பெற

பிரசவித்த பெண்கள் பலமிழந்து காணப்படுவார்கள். அவர்கள் நெய் விட்டு கீரையை வதக்கியோ கடைந்தோ சாப்பிட்டுவந்தால் தேக்கத்தில் பலம் ஏறும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பாலும் சுரக்கும.

வளரும் குழந்தைகளுக்கு

வளரும் குழந்தைகள் சுறுசுறுப்புடன் புத்திசாலித்தனத்துடன் பயிலவும். உடல் பலத்துடன் வளரவும் அரைக்கீரை அருமருந்தாகப் பயன்படுகிறது. இக்கீரையை சிறிய வெங்காயத்துடன் வதக்கி தினசரி சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்:

  • மலச்சிக்கல் தீரும்.
  • குளிர்காய்ச்சல் போகும்
  • ஜலதோஷம் மற்றும் நரம்புதளாச்சி நீங்கும்.
  • ஆண்மைக்குறைவு நீங்கும்.
  • உடல்வலி தீரும்.
  • வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போகும்.
  • பிடரிவலி மற்றும்  நரம்புவலி ஆகியன நீங்கும்.
  • பிரசிவித்த பெண்கள் இழந்த பலத்தை மீட்டுத்தரும்.
  • காய்ச்சல் நீங்கும்.
  • காய்ச்சல், குளிர்க்காய்ச்சல், ஜன்னி, காசம், வாத, பித்த நோய் மற்றும் பல நோய்களை இந்த அரைக்கீரை தீர்க்கும்

அரைக்கீரை விதையை சிறிதளவு எடுத்துக்கொண்டு இதை நல்லெணெய் விட்டுக்காய்ச்சி சூடு பொறுக்கும் பதத்தில் எடுத்து வடிக்கட்டி தலைக்குத் தடவிவந்தால் முடிகருமையாகவும் செழிப்பாகவும் வளரும் நரையும் போகும்.


ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை, ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை, ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நீர்க் கடுப்பு நீக்கும் பசலைக்கீரை
கிராமங்களில் பெரும்பாலும் இக்கீரையை காணலாம். வேலிகளில் கொடியாகப் படர்ந்து பார்க்க அழகாய் இருக்கும். சிறு வெற்றிலை அளவில் தடிமனாகக் காணப்படும்.  பசலையில் இருவகை உண்டு ஒன்று கொடிப்பசலை இன்னொன்று தரைப்பசலை. கொடிப்பசலை பச்சை நிறம் உடையது இலை பெரியதாக இருக்கும் இது

மேலும்...

 முருங்கைக் கீரை
முருங்கை கீரையில் எல்லா விதமான சத்துக்களும் உள்ளன. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் நல்ல வலுவும் ஆயுட்காலம் வரை கிடைக்கும் .இக்கீரையில் உள்ள மருத்துவ பலன்கள்: தாதுபலம் பெருகும் , ரத்த அழுத்த நோய் குணமாகும் ,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in