tamilkurinji logo


 

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது,




இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

First Published : Thursday , 17th November 2011 11:54:02 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது,

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. மாநில பதிவு மூப்பு தகுதி அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் மொத்தம் 9,200 பேர் கொண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் இடைநிலை ஆசிரியர் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கென 20 ஆயிரம் விண்ணப்பங்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. முதல்நாளான திங்கள்கிழமை பதிவுதாரர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பதிவு மூப்புத் தகுதிப் பட்டியல் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்தது. பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவின்படி பதிவு மூப்புத் தகுதியிருந்தும் பட்டியலில் இடம்பெறாதவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து கடிதம் பெற்று இந்த விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விண்ணப்ப விநியோகம் நவம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும். பூர்த்திசெய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அன்றே கடைசி தேதி ஆகும்.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் திணறுகிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பணி நியமனங்களில் 20 சதவீதம்

மேலும்...

 1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்
விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2007,2008, 2012, 2013ம் ஆண்டுக்கான குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்

மேலும்...

 தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்
ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5,451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18,932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவாரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் வருமாறு:-தமிழ் - 1,778ஆங்கிலம் - 5,867வரலாறு - 4,185புவியியல் - 1,044கணிதம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in