இந்திய கடற்படை மாலுமி வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்

இந்திய கடற்படை மாலுமி வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்
இந்திய கடற்படையில் மாலுமி வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். இதற்கான தேர்வு முகாம் சென்னையில் 29, 30-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடற்படையில் மாலுமி பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான முகாம் சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையாறு வளாகத்தில் 29 மற்றும் 30-ந் தேதியில் காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த பணிக்கு ஆண்கள் மட்டுமே தகுதி உடையவராவர். பிளஸ்-2-வில் கணிதம், இயற்பியல் பாடங்களை கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். 1.8.1991-க்கும் 31.7.1995-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச உயரம் 157 செ.மீ. அதற்கு தகுந்தாற்போல் எடை அவசியம்.

தேர்வில் தகுதிபெறுவதற்கு உடற்திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தேர்வுக்கு வரும்போது எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 கல்விச்சான்றிதழ், என்.சி.சி.யில் இருந்திருந்தால் அதற்கான சான்றிதழ், இருப்பிட அடையாளச்சான்று, நன்னடத்தைச்சான்று, விளையாட்டு சான்றிதழ்கள், நெகட்டிவ்-உடன் கூடிய 10 கலர் போட்டோக்கள் ஆகியவற்றை எடுத்துவரவேண்டும்.

தேர்வுக்கான பாடத்திட்டத்தை www.nausenabharti.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். கூடுதல் விவரங்கள் அறிய ஐ.என்.எஸ். அடையாறு மையத்தில் உள்ள கல்வி பிரிவு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
https://goo.gl/KncB8k


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்