First Published : Monday , 24th March 2014 12:29:06 AM Last Updated : Monday , 24th March 2014 12:29:06 AM
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய முதலீட்டாளர்களின் பார்வை தற்போது மக்களவை தேர்தலை நோக்கி திரும்பியிருப்பதாக பங்குச்சந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 21 தேதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் ரூ.9597 கோடி அன்னிய முதலீடு வந்துள்ளதாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய சந்தைகளில் பெரும்பங்கு வகித்து வரும் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஜனவரி மாதம் ரூ.714 கோடியும், பிப்ரவரி மாதத்தில் ரூ.1404 கோடியும் முதலீடு செய்துள்ளனர். தற்போது இந்தியாவில் 1715 பதிவு செய்யப்பட்ட அன்னிய நிதி நிறுவனங்கள் உள்ளன.
அண்மைக்காலமாக இந்திய பங்குச்சந்தை குறியீட்டெண்கள் புதிய உச்சங்களை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்
ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த
முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி' தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.
தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்