tamilkurinji logo


 

உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,




உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

First Published : Tuesday , 15th February 2011 07:16:02 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,

மாவட்டங்களில் மனநல மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவி அளிக்க தேவைப்படும் உளவியலாளர்கள் மற்றும் சமூகநல பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் வி.கே.சுப்புராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மாவட்ட மனநல சுகாதாரத் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மன நோயாளிகளுக்கும், மனநோய்க்கு எளிதில் இலக்காகும் நபர்களுக்கும், சிறப்பான மருத்துவ சிகிச்சை ஆரம்ப சுகாதார நிலையம், தாலுக்கா மருத்துவமனைகள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருவதாகும்.

இந்த திட்டம் அமலாவதற்கு முன்பு, மருத்துவ கல்லுÖரி மருத்துவமனைகளிலோ, பெருநகரங்களில் உள்ள மனநல மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற முடிந்தது. இதனால், அதிகமான பொருட்செலவும், நேரமும், உடன் வருபவர்களின் நேர இழப்பும், ஏற்பட்டு வந்தது. சிகிச்சையின் இடையே தவிர்க்க இயலாத காரணத்தால், தொடர் சிகிச்சை எடுக்க இயலாத நிலை இருந்து வந்தது.

இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு மனநோயாளிகள் அதிக அளவில் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே சிகிச்சை பெற்றும், குணமடைந்தும் வருகிறார்கள். எட்டு மாவட்டங்களில் மனநல மருத்துவர்களுக்கு தொழில் நுட்ப உதவி அளிக்க உளவியலாளர்கள் மற்றும் சமூக நலப்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

அதன்படி, மதுரை, தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில், உளவியலாளர் மற்றும் சமூக நலப்பணியாளர் பணியிடமும், நாமக்கல், திருவாரூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் சமூக நலப்பணியாளர் பணியிடமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உளவியாளர் பணியிடமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலப்பணியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் முழுக்க முழுக்க தற்காலிகமானதாகும்.

உளவியலாளர் எம்.பில் (கிளினிக்கல் சைக்காலஜி) அல்லது எம்.ஏ அல்லது எம்.எஸ்ஸி (உளவியல்) துறையில் 6 மாத பயிற்சி அனுபவம் மற்றும் சமூக நல ஊழியர் எம்.எஸ்.டபிய்ல்ï-எம்.ஏ சமூக நலப்பணி மனநலம் பயின்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு இல்லை. சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உளவியலாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.8 ஆயிரம், சமூக நல ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் அவர்களது விண்ணப்பத்தினை வரும் 24-ந் தேதிக்குள் இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், (மத்திய மனநலத் திட்டம்) தொகுப்பூதிய பணியிடம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு தங்களின் பெயர், பிறந்த தேதி, கல்வி தகுதி, சொந்த மாவட்டம் சான்றிதழ்களை இணைத்து (ஜெராக்ஸ் நகல்) தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை குறிப்பிட்டு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in