tamilkurinji logo


 

ஒரே நாளில் இரு ஆசிரியர் தேர்வு: குழப்பத்தில் பட்டதாரி விண்ணப்பதாரர்கள்,




ஒரே நாளில் இரு ஆசிரியர் தேர்வு: குழப்பத்தில் பட்டதாரி விண்ணப்பதாரர்கள்

First Published : Thursday , 23rd June 2011 09:34:03 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஒரே நாளில் இரு ஆசிரியர் தேர்வு: குழப்பத்தில் பட்டதாரி விண்ணப்பதாரர்கள்,

ஆசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு (நெட்) மற்றும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) ஆகிய இரு தேர்வுகளும் ஜூன் 26-ம் தேதியே நடைபெறவுள்ளதால், இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பல்கலைக்கழக மானியக் குழு ஆண்டுதோறும் இரு முறை தேசிய தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் முதுநிலைப் பட்டம் பெற்ற அனைவரும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறுபவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகச் சேரலாம்.

மத்திய பள்ளிக் கல்விக் குழு (சிபிஎஸ்சி) இந்த ஆண்டு முதல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடிஇடி) நடத்துகிறது. இதில் பிஎட் முடித்தவர்கள் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறுபவர்கள் சிபிஎஸ்சி பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகச் சேரலாம்.

முதுநிலைப் பட்டத்துடன் பிஎட் முடித்த லட்சக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டில் இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த இரு தேர்வுகளும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளன. இதனால், இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ளவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: வழக்கமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் ரயில்வே பணிக்கான தேர்வு, வங்கிப் பணிக்கான தேர்வு ஆகியவை எப்போதாவது ஒரே நாளில் வரும் சூழல் ஏற்பட்டால், ஏதாவது ஒரு தேர்வு வேறொரு நாளுக்குத் தள்ளிவைக்கப்படும்.

அந்த நம்பிக்கையில் இப்போது இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்திருந்தோம். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எங்களில் பலருக்கு திருச்சியில் ஒரு தேர்வும், மதுரையில் ஒரு தேர்வும் நடைபெறுகிறது.

இதனால், எந்தத் தேர்வில் பங்கேற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், இப்போதுள்ள இந்தச் சூழலை மத்திய அரசுக்கு விளக்கி ஏதாவது ஒரு தேர்வை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

ஒரே நாளில் இரு ஆசிரியர் தேர்வு: குழப்பத்தில் பட்டதாரி விண்ணப்பதாரர்கள், ஒரே நாளில் இரு ஆசிரியர் தேர்வு: குழப்பத்தில் பட்டதாரி விண்ணப்பதாரர்கள், ஒரே நாளில் இரு ஆசிரியர் தேர்வு: குழப்பத்தில் பட்டதாரி விண்ணப்பதாரர்கள்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in