கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு
1870 பணியிடங்களுக்காக 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதிய கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1870 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான (வி.ஏ.ஓ.) பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தகுதி போதும். ஆனாலும் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், என்ஜினீயர்கள் ஆகியோரும் விண்ணப்பித்தனர். மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். அதனால் தேர்வு எழுத 3 ஆயிரத்து 483 மைய ங்கள் அமைக்கப்பட்டன.

எழுத்து தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்காமல் இருக்க வீடியோ படமும் எடுக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.நட்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தாசில்தார்கள் உள்ளிட்ட பறக்கும் படையினர் ஆங்காங்கே தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

ஏற்கனவே குரூப்-2 தேர்வின்போது வினாத்தாள் அவுட் ஆனதால் மிகவும் கவனமாக இந்த வி.ஏ.ஓ.தேர்வு நடத்தப்பட்டது. அதுபோல வினாத்தாள் அவுட் ஆகவில்லை.
எப்போது தேர்வு முடிவு வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முடிவு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. 
https://goo.gl/xmVco9






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்