குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
டி.என்.பி.எஸ்.சி. குருப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜுன் 4-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 91/2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) செயலாளர் டி.உதயச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகளில் 10,718 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும், குரூப்-8 ல் அடங்கிய நிர்வாக அலுவலர் (கிரேடு-4)-ல் 75 பணி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பையும் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்க கடைசி நாள் 28.5.2012 ஆகவும் வங்கி அல்லது அஞ்சலகங்களில் கட்டணம் செலுத்த கடைசி நாள் 30.5.2012 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று வரை 91/2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கடைசி நேர நெரிசலை தவிர்த்திடவும், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதியும், குரூப்-4, குரூப்-8 தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 4.6.2012 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகள் மூலமாக உரிய விண்ணப்ப மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திட கடைசி நாள் ஜுன் 6-ந் தேதி ஆகும்.

இந்த இரு தேர்வுகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்து இதுவரை அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகள் மூலமாக உரிய தேர்வுக் கட்டணம் செலுத்தாதவர்கள் உடனடியாக தேர்வுக் கட்டணத்தை செலுத்திட வேண்டும். உரிய கட்டணத்தைச் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும், ஏற்கனவே நிரந்தரப் பதிவு முறையில் (one time registration) மட்டும் பதிவு செய்தவர்கள் தொகுதி-4ல் விண்ணப்பிக்க விரும்பினால் அவர்கள் மீண்டும் தொகுதி-4க்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்த சந்தேகங்கள் ஏதும் இருப்பின், 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

இவ்வாறு உதயச்சந்திரன் கூறியுள்ளார்.
https://goo.gl/XNw5kb


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்