tamilkurinji logo
 

குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு,


குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு

First Published : Friday , 3rd August 2012 07:13:36 PM
Last Updated : Friday , 3rd August 2012 07:13:36 PM



குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்வதற்கான (குருப் 2) அறிவிப்பை கடந்த ஜூன் 13ம் தேதி வெளியிட்டது. இதில் சப்,ரிஜிஸ்டிரார் (52), நகராட்சி ஆணையர் (14), உதவிப் பிரிவு அலுவலர் (12), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (3), முதுநிலை ஆய்வாளர் (181), கண்காணிப்பாளர்/ இளநிலை கண்காணிப் பாளர் (162), இளநிலை கூட்டுறவு தணிக்கையர் (229), வருவாய் உதவியாளர் (380) உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றிருந்தன.

இத்தேர்வுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஜூலை 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 40 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 12ம் தேதி நடக்கிறது. மொத்தம் 114 மையங்களில் 3,456 ஹால்களில் இத்தேர்வு நடக்கிறது. \இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உதயச்சந்திரன் கூறுகையில், ‘குருப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் டிஎன்பிஎஸ்சி இணையதளமான   www.tnpsc.gov.in, www.tnpscexams.net லிருந்து பதவிறக்கம் (டவுன்லோடு) செய்து பெற்று கொள்ளலாம். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால்   contacttnpsc@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம்' என்றார்.



  Tags :  
குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு, குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு, குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in