குரூப் 2 நேர்காணலில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

குரூப் 2 நேர்காணலில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
குரூப் 2 நேர்காணலில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப் 2 பணிகளுக்கான நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த ஜூன் 8ம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தேர்வாணையம் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நேர்முகத் தேர்வுக்கு தவிர்க்க முடியாத மற்றும் எதிர்பாராத காரணங்களால் வரமுடியாதவர்கள், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு தேர்வாணையத்தில் 26ம் தேதி பிற்பகல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிலும் 27ம் தேதி முற்பகல் நடைபெறும் நேர்காணல் தேர்விலும் கலந்து கொள்ளலாம். அவர்கள், தங்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய நேர்காணல் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும். மேற்குறிப்பிட்ட நாளில்  நேர்காணல் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் வருகை தரத் தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன்பின் நேர்காணல் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.
https://goo.gl/zoM6vH


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்