tamilkurinji logo


 

குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி,Group 2 last date

Group,2,last,date




குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி

First Published : Thursday , 12th July 2012 06:12:58 PM
Last Updated : Thursday , 12th July 2012 06:12:58 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 288

குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி,Group 2 last date

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 13) கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூலை 17 கடைசி.

நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் (தலைமைச் செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவின் கீழ் 3 ஆயிரத்து 631 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 13-ம் தேதி வெளியிட்டது. தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

இணையதளத்தில் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த ஜூலை 17 கடைசி நாளாகும். நிரந்தரப் பதிவு எண்ணைப் பெற்றவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக கடைசி தினத்துக்கு முந்தைய நாளான வியாழக்கிழமை (ஜூலை 12) ஒரே நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்காக இணையதளம் வழியே இதுவரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்போரைக் காட்டிலும் இருமடங்கு ஆர்வம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் காணப்படுகிறது. தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட மூன்று நாள்களுக்குள் இதுவரை 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10-ம் தேதி. செப்டம்பர் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி,Group 2 last date குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி,Group 2 last date குரூப் 2: விண்ணப்பிக்க இன்றே கடைசி,Group 2 last date
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்
விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2007,2008, 2012, 2013ம் ஆண்டுக்கான குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்

மேலும்...

 வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்
வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய இந்தியா முழுவதும் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு பொருளாதாரம், வணிகவியல், கணிதம், புள்ளியியல், சட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.வருமானவரித்துறை செலுத்துவோருக்கு ரிட்டன் கணக்கு தயார் செய்வது, மாதாந்திர டி.டி.எஸ். அறிக்கையை தயாரித்து சமர்ப்பிப்பது,

மேலும்...

 குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்வதற்கான (குருப் 2) அறிவிப்பை கடந்த ஜூன் 13ம் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in