கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3,607 உதவியாளர் நிலையிலான பணியிடங்களை நிரப்புவதற்காக கூட்டுறவு சங்கங்களின் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் கடந்த மாதம் 9-ந் தேதி எழுத்து தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களுக்கு கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இம்மாதம் 2-ந் தேதி முடிய நேர்முகத்தேர்வு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நேர்முகத்தேர்வு, 28-ந் தேதி அன்று மட்டும் சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பின்னர், பலத்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, 29-ந் தேதி முதல் நடைபெற இருந்த நேர்முகத்தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட நேர்முகத்தேர்வுகள், தேர்வாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் வரும் 23-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை நடத்த மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தினால் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, கடந்த மாதம் 29-ந் தேதியில் இருந்து இம்மாதம் 2-ந் தேதி வரை நேர்முகத்தேர்வில் பங்கேற்க இருந்த தேர்வாளர்களுக்கு தற்போது 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தலைநகர்களில் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பான அழைப்பு கடிதங்கள் அவரவர் தொடர்பு முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய சுய குறிப்பை இதுவரை பதிவேற்றம் செய்யாத தேர்வாளர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீநீஷீஷீஜீsக்ஷீதீ.ஷீக்ஷீரீ என்கிற இணையதளத்தில், உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவேற்றம் செய்த விவரங்களை, இரு நகல்கள் எடுத்து அவற்றில் தங்கள் புகைப்படங்களை ஒட்டி, அவற்றுடன் நேர்முகத்தேர்வுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (அசல் மற்றும் இரு நகல்கள்) எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறார்கள். மேலும், விவரங்கள் தேவைப்படின், 044-24801034, 24801036 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இவ்வாறு மாநில ஆள்சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

https://goo.gl/cRuzDx


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்