tamilkurinji logo
 

கோயம்புத்தூரில் கல்லூரி பேராசிரியை கழுத்து அறுத்து கொலை,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> தமிழகம்

கோயம்புத்தூரில் கல்லூரி பேராசிரியை கழுத்து அறுத்து கொலை

First Published : Friday , 6th January 2017 08:10:17 PM
Last Updated : Friday , 6th January 2017 08:10:17 PM


கோயம்புத்தூரில் கல்லூரி பேராசிரியை கழுத்து அறுத்து கொலை,tamil news india news

கோவையை அடுத்த இருகூர் ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் பிரிவில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.


 இவரது மனைவி லதா(வயது 38). இவர் திருப்பூர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்த்து வந்தார். இவர்களுக்கு சஞ்சு(4) என்ற மகன் உள்ளான்.

குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 1 வருடமாக கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். லதா குழந்தையுடன் வசித்து வந்தார்.

தினமும் கல்லூரிக்கு செல்வதால் லதா தனது மகனை அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்து இருந்தார். தினமும் அவர் தனது மகனை பார்த்துவந்தார்.

இதேபோல் நேற்று இரவும் தனது மகனை பார்த்துவிட்டு வீடு திரும்பிய லதா இன்று காலை 7.30 மணியாகியும் வெளியே வரவில்லை.

இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்ற பெண் லதா வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு அவரை அழைத்தார். நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து பதில் இல்லை. இதையடுத்து ராணி லதாவின் வீட்டு கதவை தட்ட முயன்றார். அப்போது கதவு திறந்து இருந்தது. பின்னர் ராணி வீட்டிற்குள்ளே சென்றார். அப்போது படுக்கை அறையில் இருந்து புகை வெளியேறியது.

அங்கு சென்று பார்த்தபோது லதா எரிந்த நிலையில் கரிக்கட்டையாக பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணி சத்தம் போட்டு கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அக்கம்பக்கம் வசிப்பவர்களும் அங்கு திரண்டனர். அவர்களிடம் வீட்டிற்குள் லதா பிணமாக கிடக்கும் தகவலை ராணி தெரிவித்தார்.

இதையடுத்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் கமி‌ஷனர் லட்சுமி, உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது லதாவின் கழுத்து அறுக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி உடல் எரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் அவரது ஆடைகள் படுக்கை அறையில் இருந்து வெளியே சிதறி கிடந்தது. படுக்கை அறையும் எரிந்த நிலையில் இருந்தது. வீட்டில் இருந்த 7 பவுன் நகை திருடுபோய் இருந்தது. ஆனால் லதாவின் கழுத்தில் இருந்த கம்மல் அப்படியே இருந்தது. மேலும் வீட்டு முன்பு மிளகாய் தூள் சிதறி கிடந்தது.

எனவே லதா தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்மநபர் யாரோ வீட்டிற்குள் அதிகாலை நுழைந்து அவரை கொலை செய்து உடலை தீவைத்து எரித்து இருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் துப்புறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.



  Tags :  
கோயம்புத்தூரில் கல்லூரி பேராசிரியை கழுத்து அறுத்து கொலை,tamil news india news கோயம்புத்தூரில் கல்லூரி பேராசிரியை கழுத்து அறுத்து கொலை,tamil news india news கோயம்புத்தூரில் கல்லூரி பேராசிரியை கழுத்து அறுத்து கொலை,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலை உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்னார்.பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடங்கும். என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.  பொறியியல் படிப்பில் சேருவதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்

மேலும்...

 சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாட்டில் 400 கிலோ நகையுடன் 2 பெட்டகங்கள் மீட்பு
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், கட்டடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்த கட்டடத்தை தனியார் நிறுவனம் மூலம்

மேலும்...

 தலைமறைவு வாழ்க்கை - செல்போன் சிக்னலால் சிக்கிய நீதிபதி கர்ணன்
தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை போலீஸார் கைது செய்து கொல்கத்தா சிறையில் அடைத்தனர்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல் வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம்

மேலும்...

 ஜனாதிபதி தேர்தல்: எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி முடிவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in