tamilkurinji logo
 

சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> இந்தியா

சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

First Published : Tuesday , 3rd January 2017 06:01:01 PM
Last Updated : Tuesday , 3rd January 2017 06:01:01 PM


சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை - உயர்  நீதிமன்றம் தீர்ப்பு,tamil news india news

சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்பது சட்டவிரோத செயல். அரசியல்வாதிகள் யாரும் அதுபோல் வாக்கு கேட்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை தேர்தலின் போது, பாஜக வைச் சேர்ந்த மனோகர் ஜோஷி, இந்துத்துவா கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்.


அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி என்.பி.பாட்டீல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

‘இந்துத்துவா வழக்கு’ என்று பெயர் பெற்ற இவ்வழக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 1995 ம் ஆண்டு இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, ‘‘இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கை முறை. அதன் அடிப்படையில் வாக்கு சேகரித்தால் வேட்பாளரை பாதிக்காது’’ என்று தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய வேறு சில மனுக் களும் சேர்க்கப்பட்டன.

குறிப்பாக மும்பை சான்டாகுரூஸ் சட்டப் பேரவை தொகுதியில் கடந்த 1990-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் அபிராம் சிங் என்பவர் வெற்றி பெற்றார்.

இவரது வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பாம்பே உயர் நீதிமன்றம், அபிராம் சிங்கின் தேர்தல் வெற்றியை ஒதுக்கிவிட்டது. இதை எதிர்த்து அவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் இந்துத்துவா வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின்போது, ஒரு மதத்தின் தலைவர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்கும்படி தன்னுடைய ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123-ன்படி சட்டவிரோத செயலா? என்ற முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த அக்டோபர் 27-ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகிய 4 பேர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

சாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் தேர்தலில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது, முறையற்ற செயல்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(3) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘அவரது மதம்’ என்பது சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றியது.


இங்கு மதம் என்பது வாக்காளர்கள், வேட்பாளர்கள், அவர்களுடைய ஏஜென்ட்கள் என அனைவரையும் குறிக்கும்.

இதுபோன்ற பிரச்சினைகளை கையாளும்போது மதச்சார்பின் மையையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, தேர்தல் சட்ட விதிகளின்படி சாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது.

தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மதச்சார்பற்றவை. மக்களுக்கும் அவர்கள் வழிபடும் நபர்களுக்கும் உள்ள உறவு என்பது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.

எனவே, ஜாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க முடியாது


எனினும், யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள‘அவரது மதம்’ என்பது வேட்பாளரின் மதத்தை மட்டும்தான் குறிப்பிடுகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

எனினும், பெரும்பான்மை அடிப்படையில் 4 நீதிபதிகள் ஒரே கருத்தில் தீர்ப்பை நேற்று வெளியிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, விரும்பும் மதத்தை பின்பற்றவும், அதைப் பற்றி பிரச்சாரம் செய்யவும் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தேர்தலுக்காக அந்த மதத்தை பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை - உயர்  நீதிமன்றம் தீர்ப்பு,tamil news india news சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை - உயர்  நீதிமன்றம் தீர்ப்பு,tamil news india news சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்கு தடை - உயர்  நீதிமன்றம் தீர்ப்பு,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு சப்-இன்ஸ்பெக்டர் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜக்குரா பகுதியில் போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜக்குரா ஹஸ்ரத்பால் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்,  போலீசார் மற்றும் எஸ்பிஓ அதிகாரி என 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

மேலும்...

 இன்று முதல் 233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமல்.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என 4 வகைகளில் விதிக்கப்பட்டுள்ளன.இந்த முறையால் சில பொருட்களுக்கான வரி ஏற்கனவே இருந்ததை விட

மேலும்...

 எனக்கும் ஓய்வு தேவை, நான் ரோபோ அல்ல: விராட் கோலி
இந்திய அணியின் கேப்டன் வீர்ராட் கோலி இந்த வருடம் மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 10 20 ஓவர்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். வீராட்கோலி இந்திய பிரிமீயர் லீக் 10-வது சீசனில் 10 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.இந்திய

மேலும்...

 பாதுகாப்புக்காக குடியரசுத் தலைவரின் மகளுக்கு மாற்றுப்பணி வழங்கிய ஏர் இந்தியா நிறுவனம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலளித்த விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகளான ஸ்வாதி, தேசிய விமானப் போக்குவரத்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in