சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சிவில் நீதிபதிகள் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
சிவில் நீதிபதிகள் தேர்வு எழுதியவர்களில் 460 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும் மே இறுதியில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காலியாக உள்ள 185 சிவில் நீதிபதிகள் பதவியிடங்களுக்கான தேர்வை ஐகோர்ட்டு நடத்துவதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு கடந்த ஜனவரி 21-ந் தேதி வெளியிட்டது. இந்தத் தேர்வுக்காக 10 ஆயிரத்து 443 பேர் விண்ணப்பித்தனர். 8,895 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது.

மார்ச் 24 மற்றும் 25-ந் தேதிகளில் 4 பாடங்களுக்காக தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 6,702 பேர் பங்கேற்றனர்.

எஸ்.சி., எஸ்.டி.யினர் 30 மதிப்பெண், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 35 மதிப்பெண், பொது பிரிவினர் 40 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துவிட்டது. இதில் 460 பேர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான (Vaiva) அழைப்புக்கடிதங்கள் அனுப்பும் பணி 7-ந் தேதி முதல் தொடங்கும்.

தேர்வு முடிவுகளை www.hcmadras.tn.nic.in என்ற இணையத்தளத்தின் மே 3-ந்தேதி (இன்று) வெளியிடப்படும். 4 பாடங்களையும் எழுதியவர்களின் மார்க், மொத்த மார்க் உள்ளிட்ட விபரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். வெற்றிபெற்ற 460 பேரின் பெயர்ப்பட்டியல் அவர்களின் வகுப்பு வாரியாக வெளியிடப்படும்.

தேர்வில் வெற்றிப்பெற்ற 460 பேருக்கு மே மாதம் கடைசி வாரத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கான அழைப்பு கடிதம் தனக்கு கிடைத்துவிட்டதா? என்பதை 460 பேரும் விழிப்புணர்வுடன் இருந்து உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://goo.gl/qtZMbX


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்