டி.என்.பி.எஸ்.சி. ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை

டி.என்.பி.எஸ்.சி. ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை
டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் தற்போது புது பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய அனைத்து தகவல்களையும் இடம் பெற செய்திருக்கிறோம். இனி வரும் காலங்களில் டி.என்.பி.எஸ்.சி.க்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஞுஞுஞு.ஞ்ஙூசிசூஷஞூஹஙுசூ.ஙூக்ஞ் என்ற மின் முகவரியில் தங்களை பற்றிய தகவல்களை நிரந்தரமாக பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த பதிவு 5 ஆண்டுக்கு நீடிக்கும். இணையதளத்தில் பதிவு செய்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு தனித்துவ அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். அவ்வப்போது டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்த விவரங்கள் அவர்களுக்கு குறுந்ததகவல் (SMS) அனுப்பப்படும். மெயிலிலும் அனுப்பி வைக்கப்படும்.

இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்வதற்கு இணைய விண்ணப்பத்தில் பதிவுக்கட்டணம் ரூ.50-யை இணைய வங்கி முறையிலும் (நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு), இந்தியன் வங்கி கிளைகளிலும், 500 குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் கட்டலாம். பதிவுக்கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே பதிவு முறையானதாக கருதப்படும்.

அதே நேரம் இந்த பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாகவும் கருதப்படாது. தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழி விண்ணப்பத்தினை பயன்படுத்தியும், வரையறுக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.

நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்கள் தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

இது போன்று நிரந்தர பதிவு முறையை கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தனித்துவ அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை இணையம் வழியாகவும் செலுத்தலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது வேலை எளிதாக இருக்கும். தவறுகளும் நடக்காமல் இருக்கும். இணையதள வழியில் பதிவு செய்பவர்கள் கேட்கும் போது உண்மை நகல்களை காண்பிக்க வேண்டும். உண்மை நகலின் குறியீட்டு எண்களையும் இணைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களையோ, சான்றிதழ்களின் படிம நகல்களையோ, கட்டணம் செலுத்தியதற்கான ஆவணச்சான்றுகளையோ தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததற்கான ஒப்புகை உடனடியாக விண்ணப்பதாரர்களின் இ-மெயில் மற்றும் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இது போன்ற புதிய முறை எந்த மாநிலத்திலும் இதுவரையில் அமல்படுத்தவில்லை. இந்தியாவில் முதல் முறையாக அமல்படுத்தியிருக்கிறோம்.

கிராமப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் தாலுகா பகுதிக்கு இரண்டு மையங்கள் என 500 உதவி மையங்களை ஏற்படுத்த இருக்கிறோம். கணினி, அச்சு எந்திரம், இணைய ஒளிப்பதிவு கருவிகள் வசதியுடன் இந்த மையம் செயல்படும். இங்கு இளைஞர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து அனுப்பலாம். தேவைக்கேற்ப கூடுதல் உதவி மையங்களை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவி மையங்களை அணுகலாம். இதற்கு அவர்கள் தனியாக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தின் மூலமே ஹால்டிக்கெட்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.tnpscxams.net இணையதளத்தில் முந்தைய ஆண்டின் டி.என்.பி.எஸ்.சி. கேள்வித்தாள்கள், விடைத்தொகுப்புகள், தகுதி மதிப்பெண்கள், கலந்தாய்வு விவரம் மற்றும் பல்வேறு விவரங்களை பார்க்கலாம்.

குரூப்-1 தேர்வு முடிவுகள் வருகிற 15-ந் தேதியும், குரூப்-2 முடிவுகள் இந்த மாத இறுதியிலும் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட குரூப்-4 முடிவுகள் மதிப்பெண்களுடன் இந்த மாதத்தில் இணைக்கப்படும். இன்றைக்கு 16 பதவிகளுக்கு 12 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 152 காலியிடங்கள் உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜுன் 2-ந் தேதி முதல் அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறுகிறது.

இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.
https://goo.gl/vvMncj


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்