tamilkurinji logo
 

தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி,Gold rate falls very much

Gold,rate,falls,very,much


தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி

First Published : Friday , 21st June 2013 09:06:13 PM
Last Updated : Friday , 21st June 2013 09:06:13 PM


தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி,Gold rate falls very much

நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.

அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக குறைந்து வருகிறது.

சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,564 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,512 ரூபாய்க்கும் விற்பனையானது.

24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,420 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, 28 ரூபாய் குறைந்து, 2,536 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 224 ரூபாய் சரிவடைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

10 கிராம் சுத்த தங்கம், 300 ரூபாய் குறைந்து, 27,120 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 44.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,285 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, தங்கம் ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "அமெரிக்காவின் எழுச்சியால், தங்கம் விலை இன்னும் குறைந்திருக்க வேண்டும்.

டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட சரிவால், விலை சற்றே குறைந்துள்ளது' என்றார்.



  Tags :  
தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி,Gold rate falls very much தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி,Gold rate falls very much தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி,Gold rate falls very much
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு
தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in