tamilkurinji logo


 

தமிழக போலீஸ் துறையில் 13,320 பணியிடங்களுக்கு காவலர் தேர்வு,




தமிழக போலீஸ் துறையில் 13,320 பணியிடங்களுக்கு காவலர் தேர்வு

First Published : Wednesday , 21st March 2012 06:31:20 PM
Last Updated : Wednesday , 21st March 2012 06:31:20 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

தமிழக போலீஸ் துறையில் 13,320 பணியிடங்களுக்கு காவலர் தேர்வு,

தமிழக போலீஸ், சிறைத்துறை, மற்றும் தீயணைப்பு துறைக்கு 13,320 காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. விண்ணப்ப மனுக்களை தபால் நிலையங்களில் வாங்கி பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், மாநகர, மாவட்ட சேமநல படைப்பிரிவுக்கு ஆண்கள் 4,284 பேரும், பெண்கள் 1,835 பேரும் என மொத்தம் 6,119 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு ஆண்கள் 6,033 பேரும், பெண்கள் 56 பேரும் என, மொத்தம் 6,099 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இரண்டாம்நிலை சிறைக்காவலர்கள் ஆண்கள் மட்டும் 377 பேரும், தீயணைப்போர் 791 பேரும் மொத்தம் 13,320 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

12,152 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வில், 5 சதவீத பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் நேரடியாக நிரப்பப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம்நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மொத்தகாலி பணியிடத்தில், 10 சதவீதம் ஓய்வு பெற்ற, மரணம் அடைந்த வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

விண்ணப்பதாரர்களுக்கான வயது தகுதி, 1-7-2012 அன்று 18 வயது நிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். 24 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். பி.சி, எம்.பி.சி. பிரிவினர் 26 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 29 வயதுவரை விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.

இதற்கான விண்ணப்பபாரங்கள் தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பாரங்களை, ஏப்ரல் 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், சென்னை-2 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு ஜுன் மாதம் 24-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக போலீஸ் துறையில் 13,320 பணியிடங்களுக்கு காவலர் தேர்வு, தமிழக போலீஸ் துறையில் 13,320 பணியிடங்களுக்கு காவலர் தேர்வு, தமிழக போலீஸ் துறையில் 13,320 பணியிடங்களுக்கு காவலர் தேர்வு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in