tamilkurinji logo
 

தி.நகரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news

tamil,news,india,news,

செய்திகள் >>> தமிழகம்

தி.நகரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை

First Published : Tuesday , 10th January 2017 11:07:50 AM
Last Updated : Tuesday , 10th January 2017 11:07:50 AM


தி.நகரில் தொழிலதிபர்   வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news

தொழிலதிபர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை தி.நகர் பசுல்லா சாலையை ேசர்ந்த தொழிலதிபர் கைலாஷ் (58). இவர், எல்இடி பல்புகளை மொத்தமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வருகிறார்.

கைலாஷ் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றிருந்தார். பின்னர், நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்பியுள்ளார். 



அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு கைலாஷ் அதிர்ச்சியடைந்தார். ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என கருதி பதறிய அவர், உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

வீட்டில் அனைத்து பொருட்களும் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 100 சரவன் தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



அதன்படி, போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை புதிவு செய்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடமும், அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்த ேபாலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும், கைலாஷ் வீட்டில் வேலை செய்த நபர்கள் மற்றும் அருகில் உள்ள நிறுவனங்களில் உள்ள காவலாளிகளிடம் தீவிர விசாரணை நடக்கிறது.


தொழிலதிபர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தி.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொழிலதிபர் கைலாஷ் தனது புகாரில், வீட்டில்  பீரோவுக்கான சாவியை அப்படியே வைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். இதனால், வீட்டின்  நிலவரம் தெரிந்த நபர்கள்தான் வீட்டிற்கு வந்து கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்டிருக்க முடியும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


மேலும், தொழிலதிபர் வீட்டிலும், வெளியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் உடனடியாக கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.



    Tags :    
தி.நகரில் தொழிலதிபர்   வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news தி.நகரில் தொழிலதிபர்   வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news தி.நகரில் தொழிலதிபர்   வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜல்லிக்கட்டு கோரி மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம்
மதுரை அலங்காநல்லூரில் சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காளை மாடுகளை பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் மாநிலம்

மேலும்...

 பேராசிரியை கொலையில் குடும்பத்தின் பெயரை கெடுத்ததால் கொலை செய்ததாக தம்பி வாக்குமூலம்
கோவை இருகூர் ஆர்.ஜி.புதூர் சாலை ஐ.ஓ.பி காலனிைய சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி லதா (38). இவர், திருப்பூர் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உண்டு. கருத்துவேறுபாடு காரணமாக தம்பதியர் பிரிந்து வாழ்ந்தனர்.

மேலும்...

 பெண்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளதால் அலங்காநல்லூர் போர்களமானது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான ஊர். இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். உச்சநீதிமன்ற உத்தரவினால் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி

மேலும்...

 இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா
இன்று அதிகாலையிலேயே தியாகராய நகரில் உள்ள தீபா வீட்டு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில் வந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அப்போது அ.தி.மு.க.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in