தையல், ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பதிவு மூப்பு `கட் ஆப்' தேதி வெளியீடு

தையல், ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பதிவு மூப்பு `கட் ஆப்' தேதி வெளியீடு
முழுநேர தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணி இடங்களுக்கான பதிவுமூப்பு கட் ஆப் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பதிவு மூப்பு தேதிக்கு உட்பட்ட பதிவுதாரர்கள் மட்டும் தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிக்கூடங்களில் 1,467 முழு நேர சிறப்பு ஆசிரியர்கள் மாநில அளவிலான பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில், 90 தையல் ஆசிரியர்கள், 309 ஓவிய ஆசிரியர், 1,020 உடற்கல்வி ஆசிரியர், 39 இசை ஆசிரியர் பணி இடங்கள் அடங்கும்.

இதற்காக முதல் கட்டமாக மாவட்ட அளவில் பதிவுமூப்பு பெறப்பட்டு அதைத் தொடர்ந்து மாநில அளவிலான உத்தேச பதிவுமூப்பு பட்டியல் சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தலைமை அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. ஒரு காலி இடத்திற்கு 5 பேர் என்ற அடிப்படையில் பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், உத்தேச பதிவுமூப்பு பட்டிலை வேலைவாய்ப்பு பயிற்சித்துறை நேற்று வெளியிட்டது. இதில் சிறப்பு ஆசிரியர் பதவிக்கான கட் ஆப் தேதி, இடஒதுக்கீடு வாரியாக இடம் பெற்றுள்ளது. இதை ஞுஞுஞு.ஷகுக்ஙூஙூஹகூ.ஙூகூஷ.கூஙூ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பாடப்பிரிவு வாரியான கட் ஆப் தேதி விவரம் கீழே தரப்பட்டுள்ளது:-

தையல் ஆசிரியர்

(ஆண், பெண் சேர்த்து)

ஓ.சி. - 31.12.1986

பி.சி. - 31.12.1986

எம்.பி.சி., டி.சி. - 31.12.1986

எஸ்.சி. - 31.12.1991

எஸ்.டி. - 31.12.2004

ஓவிய ஆசிரியர்

(ஆண், பெண் சேர்த்து)

ஓ.சி. - 31.12.1992

பி.சி. - 31.12.1992

பி.சி. (முஸ்லிம்) - 31.12.1995

எம்.பி.சி., டி.சி. - 31.12.1992

எஸ்.சி. (அருந்ததியர்) - 31.12.2003

எஸ்.டி. - 31.12.1997

உடற்கல்வி ஆசிரியர்

(பெண்கள்-முன்னுரிமை அல்லாதது)

ஓ.சி. - 31.7.2007

பி.சி. - 31.12.2003

பி.சி. (முஸ்லிம்) - 31.1.2012

எம்.பி.சி., டி.சி. - 31.7.2006

எஸ்.சி. - 30.4.2006

எஸ்.சி. (அருந்ததியர்) - 31.12.2006

எஸ்.டி. - 31.1.2012

ஆண், பெண் சேர்த்து

ஓ.சி. - 31.12.2003

பி.சி. - 31.12.2001

பி.சி. (முஸ்லிம்) - 31.1.2012

எம்.பி.சி., டி.சி. - 31.12.2003

எஸ்.சி. - 31.12.2003

எஸ்.சி. (அருந்ததியர்) - 31.12.2008

எஸ்.டி. - 31.1.2012

இசை ஆசிரியர்

(பெண்கள்-முன்னுரிமை அல்லாதது)

ஓ.சி. - 31.12.1992

பி.சி. - 31.7.1992

பி.சி. (முஸ்லிம்) - 31.12.2011

எம்.பி.சி., டி.சி. - 31.12.2000

எஸ்.சி. - 31.12.1994

எஸ்.சி. (அருந்ததியர்) - 31.1.2012

ஆண், பெண் சேர்த்து

ஓ.சி. - 31.12.1993

பி.சி. - 31.12.1993

பி.சி. (முஸ்லிம்) - 31.1.2012

எம்.பி.சி., டி.சி. - 31.12.2002

எஸ்.சி. - 31.12.1995

எஸ்.சி. (அருந்ததியர்) - 31.12.2005

மேற்கண்ட கட் ஆப் தேதி விவரம் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருக்கும். சென்னை மாவட்டத்தில் பதிவுமூப்புக்கு உட்பட்ட மனுதாரர்கள் 17-ந் தேதிக்குள் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு (பொது) வந்து சரிபார்த்துக்கொள்ளுமாறு உதவி இயக்குனர் டி.விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
https://goo.gl/xe6SXK


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்