tamilkurinji logo
 

நள்ளிரவு 12 மணி முதல் தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த முடியாது ,Petrol bunks will not accept card payments from midnight

Petrol,bunks,will,not,accept,card,payments,from,midnight


செய்திகள் >>> தமிழகம்

நள்ளிரவு 12 மணி முதல் தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த முடியாது

First Published : Sunday , 8th January 2017 08:45:42 PM
Last Updated : Sunday , 8th January 2017 08:45:42 PM


நள்ளிரவு 12 மணி முதல் தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த முடியாது ,Petrol bunks will not accept card payments from midnight


நள்ளிரவு முதல் பெட்ரோல் பங்குகளில் டெபிட்,கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்கம் அறிவித்துள்ளது.

கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும்வகையில், பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் மாதம் 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து நாடு முழுவதும் உருவான பண தட்டுப்பாடு,3 மாதமாகியும் இன்னும் சீரடையவில்லை.

ரொக்கப்பணத்தை கையாள்வதற்கு பதிலாக, அனைவரும் டிஜிட்டல் பண பரிமாற்ற முறைக்கு மாறுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். பண தட்டுப்பாடு காரணமாக, கணிசமானோர் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கினர். மேலும் ரொக்கம் இல்லாத, டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும்வகையில், அத்தகைய பரிமாற்றத்துக்கு 11 சலுகைகளை மத்திய அரசு அறிவித்து ஊக்குவித்தது. கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் போட்டால், விலையில் 0.75 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

இந்நிலையில்  பெட்ரோல் நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படாது என்று பெட்ரோல் பெட்ரோல் முகவர் சங்கம் திடீரென அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஐதர் அலி கூறியிருப்பதாவது:

# டெபிட்,கிரெடிட் கார்டுகள் இன்று நள்ளிரவு முதல் ஏற்றுக்கொள்ளப்படாது.

# மிககுறைந்த லாபமே கிடைப்பதால் வங்கி அட்டைகளை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

# எண்ணெய் நிறுவனங்கள் ஏதேனும் உறுதி தந்தால் முடிவை பரிசீலிப்போம்.

#வங்கிகள் வரியை வாடிக்கையாளர்களிடம் நாங்கள் எப்படி பெற முடியும்?.

# எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வங்கிகள் திடீரென வரி விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

# கார்டுகளுக்குரிய பணத்தை வங்கிகளில் இருந்து பெற 4 நாட்களாகிறது.

# பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க பொதுச்செயலாளர் ஐதர் அலி கூறியுள்ளார்.

தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறுகையில்,

# கார்டுகளை பயன்படுத்துவதால் வங்கிகளில் இருந்து பணம் கிடைப்பதில் தாமதம் என புகார் வந்துள்ளது.

# வங்கிகளில் இருந்து பணம் தாமதமாக கிடைப்பதால் இழப்பு ஏற்படுகிறது.

# ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைக்கு 1% வரி விதிப்பு தொழிலை கடுமையாக பாதிக்கும்.

# வரி விதிப்பு பற்றி எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி பெட்ரோல் பங்க்குகளிலும் நள்ளிரவு முதல் கார்டுகள் ஏற்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.  Tags :  
நள்ளிரவு 12 மணி முதல் தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த முடியாது ,Petrol bunks will not accept card payments from midnight நள்ளிரவு 12 மணி முதல் தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த முடியாது ,Petrol bunks will not accept card payments from midnight நள்ளிரவு 12 மணி முதல் தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த முடியாது ,Petrol bunks will not accept card payments from midnight
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை:அரசியல் கட்சியினர் கடும் கண்டனம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுகிய நோக்கத்துடன் எடுக்கப்பட்ட தவறான முடிவை திரும்புப்பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்திலும்,

மேலும்...

 முதல் முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மொபைல் ஆப்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள 108-ன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர், 32 மாவட்டங்களில் இருந்து சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-புரட்சித் தலைவி அம்மாவின் அரசு திறமை மற்றும் ஆற்றல் வாய்ந்த அவசர மருத்துவ

மேலும்...

 பாலில் கலப்படம் செய்யவில்லை என நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பெரும்பாலான தனியார் நிறுவன பாலில் ரசாயனக் கலப்பு இருக்கிறது என்ற தன்னுடைய புகார் தவறென்று நிரூபிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று தமிழக கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரசாயனக்

மேலும்...

 அக்னி நட்சத்திரம் நாளை முடிகிறது
இந்திய துணைக் கண்டத்தில் கோடை காலம் தொடங்கியதும் ஏப்ரல், மே மாதங்களில் உச்சகட்ட வெயில் கொளுத்தும். மே மாதத்தில் 4-ந்தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி 28-ந் தேதி வரை இருக்கும். இந்த காலத்தில் அக்னியாக வெயில் கொளுத்தும்.அக்னி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in