tamilkurinji logo


 

பி.லிட் படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதலாம்,




பி.லிட் படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதலாம்

First Published : Saturday , 10th March 2012 09:08:40 PM
Last Updated : Saturday , 10th March 2012 09:08:40 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பி.லிட் படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதலாம்,

தமிழ் பி.லிட் பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு  எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் பெறுவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த 7ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விளம்பரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் படித்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற பாடங்கள் படித்தவர்கள் தகுதித் தேர்வு எழுதலாமா என்ற சந்தேகம் பட்டதாரிகள் இடையே எழுந்துள்ளது. இதுகுறித்து பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரில் வந்து விவரம் அறிந்து வந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்தது. அந்த எண்களில் நிறைய பட்டதாரிகள் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். அதில் முக்கியமான சந்தேகம் பி.லிட் பட்டம் படித்தவர்கள் தகுதித் தேர்வு எழுதலாமா என்பதே. இது முக்கியமானது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உணர்ந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் தகுதித் தேர்வு எழுதலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது, பிளஸ் 2 படித்து முடித்து ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பி.லிட் படித்திருந்தால், அவர்கள் தகுதித் தேர்வில் அறிவிக்கப்பட்ட இரண்டு தேர்வுகளையும் எழுத தகுதி உடையவர்கள். பிளஸ் 2 முடித்து பி.லிட் மட்டும் படித்து முடித்திருப்பவர்கள், தகுதித் தேர்வில் கூறப்பட்டுள்ள தாள்,2ஐ எழுதலாம்.

பி.லிட் படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதலாம், பி.லிட் படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதலாம், பி.லிட் படித்தவர்கள் தகுதி தேர்வு எழுதலாம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in