tamilkurinji logo
 

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் பட்டபகலில் படுகொலை,Former Puducherry Assembly speaker VMC Sivakumar murdered

Former,Puducherry,Assembly,speaker,VMC,Sivakumar,murdered


செய்திகள் >>> இந்தியா

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் பட்டபகலில் படுகொலை

First Published : Tuesday , 3rd January 2017 05:49:41 PM
Last Updated : Tuesday , 3rd January 2017 05:49:41 PM


புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் பட்டபகலில்  படுகொலை,Former Puducherry Assembly speaker VMC Sivakumar murdered

புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் (வயது 65). புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவியில் வசித்து வந்தார்.

இன்று மதியம் அவர் நிரவியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்தது.

அவர்கள் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவரது கழுத்து தொங்கிய நிலையில் கீழே விழுந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.

சிவக்குமாரை உடனடியாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

காரைக்காலில் சாராய கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் ஏற்கனவே அடுத்தடுத்து 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இதனால் அந்த கும்பல் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

வி.எம்.சி. சிவக்குமார் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்தார். அப்போது அமைச்சராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்தார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வில் சீட் கிடைக்கவில்லை. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதன்பிறகு கடந்த சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.வில் சேர்ந்தார். நிரவி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.



  Tags :  
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் பட்டபகலில்  படுகொலை,Former Puducherry Assembly speaker VMC Sivakumar murdered புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் பட்டபகலில்  படுகொலை,Former Puducherry Assembly speaker VMC Sivakumar murdered புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் பட்டபகலில்  படுகொலை,Former Puducherry Assembly speaker VMC Sivakumar murdered
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மகளை காதலித்த காதலனை கடத்தி சென்று தீ வைத்து எரித்த தந்தை
ஆந்திராவில் மகளை காதலித்ததால் கோபம் அடைந்த தந்தை காதலனை கடத்தி தீ வைத்து எரித்த கொடுமை அரங்கேறியுள்ளது.ஆந்திர பிரதேசம் நல்கொண்டா அருகில் உள்ள வாலிகொண்டாவில் வசித்து வந்த அம்போஜி நரேஷ் (வயது 23) இவர் கல்லூரியில் படிக்கும் போது சுவாதி என்ற

மேலும்...

 டெல்லி, மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவல் -முக்கிய நகரங்களில் எச்சரிக்கை
டெல்லி, மும்பையில் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக 21 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக மத்திய  உளத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தாக்குதல் நிகழ்த்தும் நோக்குடன், 21 லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள், நாட்டின் பல்வேறு

மேலும்...

 பாகிஸ்தான் ஒரு மரண கிணறு : இந்தியா திரும்பிய பெண் கண்ணீர் பேட்டி
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் திருமணம் முடிக்கப்பட்டதாக புகார் கூறிய இந்திய இளம்பெண் நேற்று பலத்த பாதுகாப்புடன் நாடு திரும்பினார்.டெல்லியை சேர்ந்த உஸ்மா என்ற இளம்பெண், பாகிஸ்தானை சேர்ந்த தாஹிர் அலி என்பவரை மலேசியாவில் சந்தித்தார். நட்புடன் பழகிய இவர்கள் காதலித்ததாக கூறப்படுகிறது.

மேலும்...

 இந்தியாவிலேயே மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
கவுகாத்தியில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிக நீண்ட பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.அசாம் மாநிலம் கவுகாத்தியில் அருகே இருக்கும் சாதியா என்ற இடத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் இட்டா நகரில் உள்ள தோலா இடையே பிரம்ம

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in