tamilkurinji logo


 

மணதக்காளி கீரை,
மணதக்காளி கீரை

First Published : Thursday , 30th July 2009 12:29:31 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

மணதக்காளி கீரை,

மணதக்காளி கீரை உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவாகும்

,இக்கீரை கசப்பு தன்மை கொண்டது . இககீரையின் அனைத்து பகுதிகளும் உடல் நலத்திற்கு தேவையானவை


இக்கீரையில் அதிகஅளவு புரதம் , மாவுசத்து, தாது உப்புக்கள் உள்ளன.

மணத்தக்காளிக் கீரையை சமைத்தும் சாப்பிடலாம். சூப் செய்தும் சாப்பிடலாம்.

மருத்துவ பயன்கள்:

காய்ச்சல் சரியாகும், தலைவலி தீரும், மலச்சிக்கல் நீங்கும், வயிற்றுபுண் ஆறும், வலிப்பு நோய் சரியாகும், மஞ்சள் காமாலையை போக்கும்

இக்கீரையின் சாறெடுத்து தொண்டையில் சிறிதுநேரம் வைத்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும் வாய் துர் நாற்றமும்

நீங்கும்.

இக்கீரையுடன் இஞ்சி ,பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதயம் பலப்படும்.

மணத்தக்காளி வற்றலை நல்லெண்ணையில் பொரித்து தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அல்சர் குணமாகும். சளித்தொல்லையும் நீங்கும்.

மணத்தக்காளி வற்றல் தயாரிக்கும் முறை:

மணத்தக்காளிக் காயை ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவைத்து இரவு புளித்த தயிரில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் ஊறியபின் தயிர் வற்றியதும் வெயிலில் வைத்து நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மணதக்காளி கீரை, மணதக்காளி கீரை, மணதக்காளி கீரை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம் நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.குறைந்தது மாதம் இரு முறையாவது

மேலும்...

 ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை
அற்புதமான மருத்தவ குணம் கொண்ட  மிகவும் சத்துள்ள கீரை இது கரிசலாங்கண்ணி இதில் இரு வகைகள் உண்டு ஒன்று மஞசள் கரிசலாங்கண்ணி கரிசாலங்கண்ணியைத்தான் சமைத்துச் சாப்பிடலாம் இது தான் சமையலுக்கு எற்றது. மஞசள்காமாலைபோக கரிசலாங்கண்ணிக்கீரையை அரைத்து சாரெடுத்து

மேலும்...

 ஆண்மைக்குறைவை நீக்கும் அரைக்கீரை
இது தென்னிந்தியாவில் தோட்டங்களில் பயிரிடப்படும் அருமையான கீரையாகும். இலையின் மேல்பாகம் பச்சை நிறத்திலும் கீழ்பாகம் சிவப்பும் நீலமும் கலந்ததுபோல் இருக்கும். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு பல வியாதிகளைப் போக்கும்

மேலும்...

 நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை
வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை தூவினாலே வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுகிறது. இக்கீரையை  பிடுங்கி சயைலுக்கு பயன்படுத்தலாம்.அளவில் சிறியது என்றாலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in