tamilkurinji logo


 

மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்,




மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

First Published : Friday , 11th November 2011 10:08:12 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்,

வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்டையில் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நவம்பர் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்குவதற்கான கடைசி தேதி நவம்பர் 23.

வரும் டிசம்பருக்குள் பணி நியமனத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி, தொடக்கப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

மொத்தம் தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,743 ஆகும். அவர்களுக்கான சம்பள விகிதம் ரூ.5,200 - ரூ.20,200 ஆகும்.

இந்தப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 26.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீதமும், அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு இருக்கும். பொதுப்பிரிவில் 31 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அனைத்துப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதை புதுப்பித்திருக்க வேண்டும். ஒரு ஆசிரியர் பணியிடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் பதிவு மூப்பு தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பார்வையிடலாம்.

பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு மூப்புத் தகுதி இருந்தும் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருந்தால், அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அவர்களது பதிவு மூ ப்பு தகுதிச் சான்றிதழையும், ஜாதி சான்றிதழையும் பெற வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் அவற்றைக் காண்பித்து விண்ணப்பங்களைப் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2011 தேதியின்படி 57 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் நவம்பர் 23-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்பட வேண்டும்.

பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். ஒரு மாவட்டத்தில் பணியமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்கள், வேறு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் கோர முடியாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பருக்குள் நியமனம்: இந்த 1,743 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் பணி டிசம்பருக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகே, நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் நியமன பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்புக் கல்வியாண்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதுதவிர 20 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம், மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம், மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 1,743 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in