முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று நடக்கிறது

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று நடக்கிறது
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு சென்னை உள்பட் தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 2,895 காலி பணி இடங்களுக்கு 11/2 லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள்.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2,895 காலி இடங்களை போட்டித்தேர்வு மூலமாக நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 133 பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 1,359 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

மொத்தமுள்ள 2,895 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 774 பேர் மோதுகிறார்கள். சென்னையில் திருவல்லிக்கேணி கெல்லட் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப்பள்ளி, புரசைவாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மந்தவெளி ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, அயனாவரம் கன்னட சங்க மேல்நிலைப்பள்ளி, உள்பட 34 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ், கணிதம் ஆகிய பாடங்களில்தான் போட்டி கடுமையாக உள்ளது. தமிழ் பாடத்தில் 601 காலி இடங்களுக்கு 28,945 பேரும், கணிதத்தில் 315 காலி இடங்களுக்கு 20,797 பேரும், வரலாறு பாடத்தில் 170 காலி இடங்களுக்கு 17,053 பேரும், வணிகவியலில் 275 காலி பணி இடங்களுக்கு 15,632 பேரும், ஆங்கில பாடத்தில் 349 காலி இடங்களுக்கு 13,045 பேரும் போட்டியிடுகிறார்கள்.

இதேபோல், அரசியல் அறிவியல் பாடத்தில் 4 காலி இடத்திற்கு 48 பேரும், இந்திய கலாசாரம் பாடத்தில் ஒரு காலி இடத்திற்கு 20 பேரும், தெலுங்கு பாடத்தில் ஒரு காலி இடத்திற்கு 39 பேரும், உருது பாடத்தில் ஒரு காலி இடத்திற்கு 17 பேரும் மோதுகிறார்கள். தேர்வு முடிவை ஒரே மாதத்தில் வெளியிட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://goo.gl/WKAhx2






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்