முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு
ஒன்றரை லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2,895 காலி இடங்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) உள்பட 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மே மாதம் 27-ந் தேதி போட்டித்தேர்வை நடத்தியது.

தமிழகம் முழுவதும் 11/2 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கேள்விகளுக்கான தற்காலிக விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவு வெளியீடு

தேர்வு நடந்து முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டதால், முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று தேர்வு எழுதியவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், தேர்வு முடிவு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in/PG2012/26072012/status.asp) வெளியிடப்பட்டது.

ஆனால், தேர்வு முடிவை வெளியிட்டது குறித்து எந்த பத்திரிகைகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், தேர்வு எழுதியவர்கள் காலதாமதமாகவே தேர்வு முடிவுகளை அறிய முடிந்தது. தேர்வில் ஒரே கட் ஆப் மார்க் எடுத்தவர்களும் தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தபால் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

தற்போது, நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் மொத்த மதிப்பெண் 150 ஆகும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, ஆசிரியர் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

சிறப்பு மதிப்பெண் எவ்வளவு?

சீனியாரிட்டி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு கால அளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சீனியாரிட்டி

1 முதல் 3 ஆண்டுகள் வரை - 1 மார்க்

3 முதல் 5 ஆண்டுகள் வரை - 2 மார்க்

5 முதல் 10 ஆண்டுகள் வரை - 3 மார்க்

10 ஆண்டுக்கு மேல் - 4 மார்க்

பணி அனுபவம்

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை - 1 மார்க்

2 முதல் 5 ஆண்டுகள் வரை - 2 மார்க்

5 ஆண்டுகளுக்கு மேல் - 3 மார்க்

சம்பளம் எவ்வளவு?

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதச்சம்பளம் ஏறத்தாழ ரூ.25 ஆயிரம் கிடைக்கும். சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள நகர எல்லையில் பணியாற்றினால் ரூ.27 ஆயிரம் பெறலாம். உயர்கல்வித்தகுதிக்கு இன்கிரிமென்ட் வழங்கப்படும். எம்.பில். முடித்திருந்தால் இரண்டு இன்கிரிமென்ட் (அதாவது ரூ.1,395). அதோடு சேர்த்து எம்.எட். பட்டம் பெற்றிருந்தால் மேலும் 2 இன்கிரிமென்டுகள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/fdvGj7


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்