tamilkurinji logo
 

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்,


வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்

First Published : Thursday , 9th August 2012 06:27:18 PM
Last Updated : Thursday , 9th August 2012 06:27:18 PM



வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய இந்தியா முழுவதும் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு பொருளாதாரம், வணிகவியல், கணிதம், புள்ளியியல், சட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வருமானவரித்துறை செலுத்துவோருக்கு ரிட்டன் கணக்கு தயார் செய்வது, மாதாந்திர டி.டி.எஸ். அறிக்கையை தயாரித்து சமர்ப்பிப்பது, ஆன்லைனில் வருமான வரி கணக்கு சமர்ப்பித்தல் (இ-பைல்) ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் 5 ஆயிரம் வருமானவரி கணக்கு தயாரிப்பாளர்களை (டேக்ஸ் ரிட்டர்ன் பிரிப்பரர்ஸ்) நியமிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை திருவான்மியூர், முகப்பேர், பல்லாவரம், அண்ணாநகர் மற்றும் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் 350 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வருமானவரி கணக்கு தயாரிப்பாளர்களாக சொந்தமாக பணியாற்றலாம். அவர்கள் சேவை செய்யும் புதிய வருமானவரி செலுத்துவோர் மூலமாக எவ்வளவு வரி வருகிறதோ அதில் 3 சதவீதம் அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும்.

இந்த பணிக்கு பொருளாதாரம், வணிகவியல், சட்டம், கணிதம், புள்ளியியல் படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்த தேர்வில், பொது அறிவு, ரீசனிங், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வருமானவரித்துறை சார்பில் ஏறத்தாழ ஒரு மாத காலம் கடும் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு அவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர்கள் வருமானவரி கணக்கு தயாரிப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

தகுதியும், விருப்பமும் உடைய பட்டதாரிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கடைசி நாள் இந்த மாதம் 20-ந் தேதி ஆகும். எழுத்துத்தேர்வுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் மேற்கண்ட இணையதளத்தில் செப்டம்பர் 5-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.

எழுத்துத்தேர்வு செப்டம்பர் 23-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். மொத்தம் 160 கேள்விகளுக்கு (கொள்குறிவகை) 2 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். தேர்வுமுறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை, மாநிலங்கள் வாரியாக காலி இடங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.



  Tags :  
வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம், வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம், வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in