tamilkurinji logo
 

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது,tamil busness news

tamil,busness,news

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

First Published : Monday , 26th May 2014 12:14:07 AM
Last Updated : Monday , 26th May 2014 12:14:37 AM


வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது,tamil busness news

லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள் உயர்ந்து 25,037.54 புள்ளிகளாக உள்ளது.

தேசிய பங்குசந்தையான நிப்டி 90.35 புள்ளிகள் உயர்ந்து 7,457.45 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், மூலதன பொருட்கள் மற்றும் பொதுத்துறை பங்குகள் விலை 2% வரை அதிகரித்துள்ளது. நுகர்வோர், ஆட்டோ, மின்சாரம் மற்றும் உலோகத்துறை பங்குகள் விலை 1% வரை உயர்ந்துள்ளது. சன் பார்மா 3.4%; டாடா மோட்டார்ஸ் 2.6% மற்றும் எல் & டி 2.4% வரை அதிகரித்தன.

காலை வர்த்தக தொடக்கத்தில் ஆசியாவின் இதர பங்குசந்தையான ஹாங்காங்கின் ஹேங்சேங், 0.39%, ஜப்பானின் நிக்கி 0.73% உயர்ந்து இருந்தன. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.38% அதிகரித்து முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 58.40 ஆக உள்ளது. கடந்த வார இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.52 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    Tags :    
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது,tamil busness news வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது,tamil busness news வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது,tamil busness news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in