tamilkurinji logo
 

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் ,VAO postings

VAO,postings


வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

First Published : Wednesday , 27th February 2013 09:14:22 PM
Last Updated : Wednesday , 27th February 2013 09:14:22 PM



வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவிகளில் 2012-2013-ம் ஆண்டுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்காக 30.9.2012 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் வெற்றிபெற்று வி.ஏ.ஓ. பதவிக்கு தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்ட தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு, அதன்மூலம் 1,685 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், எஞ்சியுள்ள 185 காலி பணி இடங்களை நிரப்புவதற்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி காலை 8.30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள TNPSC அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கவுன்சிலிங் அழைக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட (attestation) ஜெராக்ஸ் நகல்களையும் கவுன்சிலிங்கிற்கு தவறாமல் கொண்டுவர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கிற்கு தேர்வர்கள் அனுமதிக்கப்படுவது அவர்கள் பரிசீலிக்கப்படும்போது உள்ள காலி பணி இடங்களை பொறுத்தே ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதிகூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.  



  Tags :  
வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் ,VAO postings வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் ,VAO postings வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் ,VAO postings
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in