tamilkurinji logo


 

1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு,VAO Exam TNPSC

VAO,Exam,TNPSC




1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

First Published : Monday , 9th July 2012 07:09:34 PM
Last Updated : Monday , 9th July 2012 07:10:32 PM


1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு,VAO Exam TNPSC

தமிழ்நாடு முழுவதும் 1,870 கிராம நிர்வாக அதிகாரிகள் (விஏஓ) தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது.  டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) கடந்த வாரம்தான் குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகளை நடத்தியது. 10,793 இடங்களுக்கு பத்தரை லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இப்போது விஏஓ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுத தகுதி படைத்த இந்த தேர்வுக்கும் பல லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 3,484 விஏஓ இடங்களுக்கு நடந்த தேர்வை 10 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வு விண்ணப்பங்கள் இணைய வழியில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாள். விண்ணப்ப கட்டணம் ரூ.50 (நிரந்த பதிவு செய்துள்ளோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை).

தேர்வு கட்டணம் ரூ.75. கட்டணத்தை வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாள். தேர்வு செப்டம்பர் 30ல் நடக்கிறது.

தேர்வு எழுதுவோருக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், அருந்ததியர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது 40 (முடிந்திருக்க கூடாது) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பதவியில் பணியமர்த்தப்படும் ஒவ்வொருவரும் அவர் பதவிப் பொறுப்பில் இருக்கும் கிராமத்தில்தான் வசிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

விஏஓ என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்தே மாவட்ட நிர்வாக அமைப்பு தொடங்குகிறது. இந்த பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்றாலும் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு, வக்கீல், பொறியாளர், ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் எல்லாம் போட்டியிடுகிறார்கள். மாத சம்பளம் ஏறத்தாழ ரூ.15,000 கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பு, அதிகாரம் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு,VAO Exam TNPSC 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு,VAO Exam TNPSC 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு,VAO Exam TNPSC
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் வசதிக்காக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in