10,000 காலி இடங்களை நிரப்ப இந்த மாதத்துக்குள் அறிவிப்பு - தேர்வாணையத் தலைவர் நட்ராஜ்

10,000 காலி இடங்களை நிரப்ப இந்த மாதத்துக்குள் அறிவிப்பு - தேர்வாணையத் தலைவர் நட்ராஜ்


அரசு அலுவலகங்களில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவது குறித்து இந்த மாதத்துக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்வாணையத் தலைவர் நட்ராஜ் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஆண்டு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் முரளி மனோகர், ஆண்டறிக்கை வாசித்தார். பல்கலைக்கழக அடிப்படை அறிவியல் துறை முதல்வர் அசோகன், உணவு அறிவியல் துறை முதல்வர் தியாகராஜன், பேராசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நட்ராஜ், பரிசு வழங்கி பேசியதாவது:

தமிழகம் முழுவதும் 700 கால்நடை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்களை தேர்வு செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். தமிழக அரசு பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 278 பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்கான தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. தேர்வு பெற்றவர்களுக்கு விரைவில் அரசாணை வழங்கப்படும்.
இவ்வாறு நட்ராஜ் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு அலுவலகங்களில் குரூப் 1, 2, 4 ஆகிய பிரிவுகளில் மொத்தம் 10,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு குறித்து மார்ச் மாதத்துக்குள் அறிவிப்பு வரும். தமிழக அரசு தேர்வாணையம் விரைவில் கணினி மயமாக்கப்படும். அதன்பின் தேர்வு பணிகள் விரைவாக நடைபெறும்’ என்றார்.
https://goo.gl/uqhsbg






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்