tamilkurinji logo
 

108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு,108 ambulance

108,ambulance


108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு

First Published : Sunday , 15th July 2012 08:34:30 PM
Last Updated : Sunday , 15th July 2012 08:34:30 PM


108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு,108 ambulance

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு அரசு சுகாதார திட்டம் மற்றும் ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனங்கள் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 470 ஆம்புலன்ஸ்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பு முகாம் சென்னை திருவல்லிக்கேணி  அரசு கஸ்தூரிபா காந்தி தாய், சேய் நல மருத்துவமனையில் உள்ள 108 ன் தலைமையிடத்தில் நேற்று தொடங்கியது. முகாமை ஜி.வி.கே இஎம்ஆர்ஐ நிறுவன மண்டல மேலாளர் பிரபுதாஸ் தொடங்கி வைத்தார். நேற்று டிரைவர் பணியிடத்துக்கு மொத்தம் 40 பேர் நேர்முகத்தேர்வுக்கு வந்தனர். இவர்களில் தகுதியான 4 பேருக்கு உடனடி பணியாணை வழங்கப்பட்டது. மருத்துவ உத வியாளர் பணியிடத்துக்கு பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் வந்தனர். அவர்கள் அனைவருமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முறையான பயிற்சியும், அதை தொடர்ந்து 108 ல் பணியும் வழங்கப்படும்.

மொத்தம் 500 காலியிடங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. ஆனால் மழையால் நேற்றைய முகாமில் குறைந்த அளவு நபர்களே வந்து கலந்து கொண்டனர். எனவே முகாம் வரும் சில நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு,108 ambulance 108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு,108 ambulance 108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு,108 ambulance
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல்

மேலும்...

 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in