16 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு

16 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
16,056 சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 5-ந் தேதி ஆகும்.

இதுகுறித்து சமூகநலத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் 31.7.2011 அன்று வரை காலியாக உள்ள 4,149 சத்துணவு அமைப்பாளர், 5,465 சமையலர் மற்றும் 6,442 சமையல் உதவியாளர் ஆக மொத்தம் 16,056 காலிப்பணியிடங்களில் தகுதியான பெண்களை பணியமர்த்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

சத்துணவு அமைப்பாளருக்கான தகுதிகள்: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான வயது 21-ல் இருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பழங்குடியினருக்கு 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதியைப் பொருத்தவரை பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி பெற்றிருந்தாலோ அல்லது தோல்வி அடைந்திருந்தாலோ விண்ணப்பிக்கலாம்.

சத்துணவு அமைப்பாளர் தற்போது உள்ளவாறே மாவட்டத்தை ஒட்டு மொத்தமாக ஓர் அலகாக கொண்டு இன சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 25 சதவீதம், பதவி உயர்வுக்கு 25 சதவீதம், நேரடி நியமனம் மூலம் 50 சதவீதம் பணியிடங்கள் நிரப்பப்படும். மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களும், சென்னை மாநகராட்சியில் சமூக நல இயக்குநரும் சத்துணவு பணியாளர் பணியிடங்களை நிரப்புவார்கள்.

சமையலர் பணிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியாகி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதியைப் பொருத்தவரை பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்.

சமையல் உதவியாளர் பணிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சமையலர், சமையல் உதவியாளர்களை மாவட்டங்களில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரும் (சத்துணவு), சென்னை மாநகராட்சியில் சமூக நல இயக்குநரும் நியமிப்பார்கள்.

சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நியமனப் பணியிடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்திற்குள் குடியிருப்பு உள்ளவர்களே பணியமர்த்தப்படுவார்கள். இன சுழற்சி முறை கையாளப்படும். மாவட்டங்களில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் (அல்லது) மாவட்ட கலெக்டர்களிடமும், மாநகராட்சி எல்லைக்குள் இருப்பவர்கள் மாநகராட்சி கமிஷனரிடமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர், சமையல், சமையல் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜுன் 5-ந் தேதி ஆகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
https://goo.gl/gFsBAc


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்