1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்
விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2007,2008, 2012, 2013ம் ஆண்டுக்கான குரூப் 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை,3 பணி களுக்கான தேர்வு முடிவு கடந்த அக்டோபர் 8ம் தேதி வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப் பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முடிந்து அண்மையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், இளநிலை உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. காலி பணியிடங்கள் குறித்த விவரம் அவ்வப்போது, மெகா திரையில் தேர்வாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங்கை பார்வையிட்ட பின்னர், டிஎன் பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் அளித்த பேட்டி: இளநிலை உதவி யாளருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன் சலிங் 10 நாள் நடைபெறும். தினமும் காலையில் 300 பேர், பிற்பகலில் 300 பேர் என 600 பேர் கவுன்சலிங் குக்கு அழைக்கப்பட்டுள்ள னர். ரேங்க் அடிப்படையில் தேர்வானவர்களுக்கு 185 துறையில் பணி ஒதுக்கப்படும்.

விஏஓவில் 1,870 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான ரிசல்ட் நவம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் நடைபெறும். அதை தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த குருப் 1, குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். 2013ல் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் ஒரு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை ஜனவரியில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
https://goo.gl/jRYsa7


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்