2000-க்கு பிந்தைய பதிவுமூப்பு உள்ளவர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் பதிவு செய்வது எப்படி?
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு மே மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கடந்த 16-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலைவாய்ப்பு பதிவுமூப்புக்கு தகுந்தாற்போல் சிறப்பு மதிப்பெண்களும் உண்டு. இதற்கான விவரங்களை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ஆண்டின் முதல் இரண்டு இலக்கங்களை குறிப்பிடும் வகையில் 19 என்று அச்சிடப்பட்டு அதற்கு பிறகு கடைசி இரண்டு இலக்கங்களை விண்ணப்பதாரர்கள் குறிப்பிடுவதற்காக இடத்தை ஒதுக்கி உள்ளனர். 1999-ம் ஆண்டுக்குள் பதிவு செய்தவர்கள் எவ்வித சந்தேகமும் இல்லாமல் குறிப்பிட்டு விடுகிறார்கள். ஆனால், 2000 மற்றும் அதற்கு பிறகு பதிவுசெய்தவர்களுக்கு பதிவு ஆண்டை குறிப்பிடுவதில் சந்தேகம் எழுந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அளித்த விளக்கம் வருமாறு:-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் சிறிய அச்சுப்பிழை ஏற்பட்டுவிட்டது. ஓ.எம்.ஆர். படிவத்தில் அடித்துவிட்டு எழுதக்கூடாது. எனவே, 2000 மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் பதிவு செய்தவர்கள் கடைசி இரண்டு எண்ணை மட்டும் அந்த இரண்டு கட்டங்களில் குறிப்பிட்டால் போதும். அதாவது 2000-ம் ஆண்டில் பதிவுசெய்தவர்கள் 19-க்குப் பிறகு 00 என்று குறிப்பிட்டால் போதும். அது 2000 என்று கம்ப்யூட்டரில் திருத்தம் செய்யப்படும்.
அதேபோல், 2010-ம் ஆண்டு பதிவு செய்திருப்பவராக இருந்தால் 19-க்குப் பின்னர் 10 என்று குறிப்பிட்டால் போதும். இந்த ஒரு காரணத்திற்காக எந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்படாது. முதலில் அச்சடித்த விண்ணப்பங்களில்தான் இந்த பிழை இருக்கும். அதற்குப் பிறகு அச்சடித்த படிவங்களில் இந்த பிழையை சரிசெய்துவிட்டோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related :
குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு
குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்டர்வியூவில் கலந்து கொண்டவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு கடந்த நவம்பர் 4ம் ...
வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் ...
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்
கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மீண்டும் வரும் 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும். தேர்வாளர்களின் ...
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ...
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.தமிழக அரசின் வருவாய் துறையில் 1,870 கிராம நிர்வாக அதிகாரி ...
VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் ...
1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்
விஏஓ பதவிக்கு 1870 பேரை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2007,2008, 2012, ...
கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு
1870 பணியிடங்களுக்காக 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதிய கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ...
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்
ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5,451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18,932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவாரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் ...
வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்
வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய இந்தியா முழுவதும் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு பொருளாதாரம், வணிகவியல், கணிதம், புள்ளியியல், சட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.வருமானவரித்துறை ...