tamilkurinji logo
 

25 ஆண்டு காலமாக தனியாக வசிக்கும் பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடிய மும்பை போலீஸ்,tamil news india news

tamil,news,india,news,

செய்திகள் >>> இந்தியா

25 ஆண்டு காலமாக தனியாக வசிக்கும் பாட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடிய மும்பை போலீஸ்

First Published : Tuesday , 3rd January 2017 06:39:05 PM
Last Updated : Tuesday , 3rd January 2017 06:39:05 PM


25 ஆண்டு காலமாக தனியாக வசிக்கும் பாட்டியின்  பிறந்தநாளைக் கொண்டாடிய மும்பை போலீஸ்,tamil news india news

25 ஆண்டு காலமாக தனியாக வசிக்கும் லலிதா சுப்ரமணியம் என்பவர் வீட்டுக்கே வந்து அவரது பிறந்தநாளை காவல் துறையினர் கேக் வெட்டிக் கொண்டாடி சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.


மத்திய மும்பையில்  வடாலா பகுதியில் வசிக்கும் லலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் மறக்கத்தக்க சம்பவமாக மாறியது. '1090' என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் மூத்த குடிமக்களுக்கு மும்பை காவல்துறையினர் உறுதுணைபுரிந்து வருகின்றனர்.

மூத்த குடிமக்கள் அவசர உதவியோ அல்லது தனிமையின் துயரத்தைப் போக்கவோ 1090 எனக்கு டயல் செய்தால் காவல்துறையினர் உரிய உதவிகளை செய்வர்.


இந்நிலையில் கடந்த ஜனவரி 2ம் தேதி பாட்டியின் பிறந்தநாள் அன்று  அவரது வீட்டிற்கு சென்று பிறந்தநாள் கொண்டாடினர் மும்பை காவல் துறையினர்.


லலிதாவின் மகன்கள் 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை புரிந்து வருகின்றனர். மற்றொருவர் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.

நேரம் கிடைக்கும் போது மட்டுமே மும்பை வந்து அவருடன் இருப்பார்கள். இந்நிலையில் லலிதாவின் விவரத்தை அறிந்து, அவரது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று மும்பை போலீஸார் முடிவு செய்தனர்.


பின்னர் லலிதா வீட்டிற்கு சென்று அவரை கேக் வெட்டவைத்து அவரது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர். மும்பை காவல் துறையினரின் இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


காவல் துறை அதிகாரி கக்கத் கூறும்போது, "அவர் என் அம்மா மாதிரி. இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எங்கள் அம்மா மகிழ்ச்சி அடைந்தார். தன் பிள்ளையால் அடிக்கடி வீட்டுக்கு வர முடியாத சூழலில், காவல் துறையினரின் உறுதுணையும் அன்பும் நெகிழவைப்பதாகச் சொன்னார்" என்றார்.    Tags :    
25 ஆண்டு காலமாக தனியாக வசிக்கும் பாட்டியின்  பிறந்தநாளைக் கொண்டாடிய மும்பை போலீஸ்,tamil news india news 25 ஆண்டு காலமாக தனியாக வசிக்கும் பாட்டியின்  பிறந்தநாளைக் கொண்டாடிய மும்பை போலீஸ்,tamil news india news 25 ஆண்டு காலமாக தனியாக வசிக்கும் பாட்டியின்  பிறந்தநாளைக் கொண்டாடிய மும்பை போலீஸ்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை: ஆய்வில் தகவல்
இந்தியாவின் மிகப் பெரிய பணக் கார நகரம் மும்பை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் கிட்டத்தட்ட 46,000 மில்லியனர்களும் 28 பில்லியனர்களும் வசிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவின் பணக்கார நகரங்கள் பற்றி நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு

மேலும்...

 மக்கள் அனைவரும் மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’(மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி மன் கி பாத் உரை

மேலும்...

 முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் பதிவேடு கேரளாவில் அறிமுகமாகிறது
நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேட்டை அறிமுகம் செய்யப் போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று ஆளுநர் பி.சதாசிவம் நேற்று கூறியதாவது:பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு

மேலும்...

 தாயின் தலையை துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்த மகன்
கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சவித்ராம்மா. இவருக்கு திம்மப்பா என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும், ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இவரது மனைவி இவரை விவகாரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில் திம்மப்பாவுக்கும் அவரது தாய்க்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in