tamilkurinji logo


 

TNPSC விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 இலவச கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்,tnpsc online one time registration

tnpsc,online,one,time,registration




TNPSC விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 இலவச கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்

First Published : Monday , 30th April 2012 10:34:06 PM
Last Updated : Monday , 30th April 2012 10:34:06 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 288

TNPSC விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 இலவச கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்,tnpsc online one time registration

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 500 இலவச கணினி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சென்னையில் இந்த சேவை மையத்தை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் அரசு பணியாளர்கள் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்காக அறிவிக்கப்படும் போட்டித்தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். தற்போது முதல்முறையாக ஆன்லைன் விண்ணப்ப முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதன்மூலம், விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து ஆன்லைனிலேயே தேர்வுக்கட்டணத்தையும் செலுத்திவிடலாம். டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு விண்ணப்ப படிவமோ, சான்றிதழ் நகல்களோ எதுவும் அனுப்ப தேவையில்லை. இந்த புதிய திட்டத்தில், `ஒன்-டைம் ரிஜிஸ்ட்ரேஷன்' என்ற ஒரு முறையையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இதில், ஆன்லைனில் ரூ.50 செலுத்தி தங்கள் விவரங்களை பதிவுசெய்து கொண்டால் போதும். அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்தாமல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். உரிய தேர்வுக்கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும். ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் திட்டத்தில் பதிவு செய்துகொண்டவர்கள் அடுத்து வரும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு விவரங்களையும் மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டியதில்லை.

அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசேஷ பதிவு எண்ணை குறிப்பிட்டால் போதும். புதிதாக ஒரு தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அடிப்படை விவரங்களுடன் போட்டோ, கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் வந்துவிடும். குறிப்பிட்ட தேர்வுக்கான விவரங்களை மட்டும் பதிவுசெய்ய வேண்டியிருக்கும். இந்த முறையில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி இல்லாதவர்களுக்காகவும், இண்டர்நெட் சேவை பற்றிய தெரியாதவர்களுக்காகவும் உதவும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. தமிழகம் முழுவதும் 500 இலவச மையங்களை அமைத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியன் வங்கிக்கிளைகளிலும், தபால் அலுவலகங்களிலும் இந்த இலவச சேவை மையங்கள் இயங்கும். இங்கு எவ்வித கட்டணமும் செலுத்தாமல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் உள்பட) ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் நேரடியாக சென்றால் அவர்களின் போட்டோ வெப்காமிரா மூலம் எடுக்கப்பட்டு ஸ்கேனிங் செய்யப்படும். அதோடு அவர்களின் கையெழுத்தும் ஸ்கேன் செய்து எடுக்கப்படும். இந்த சேவை முற்றிலும் இலவசம்.

ஆன்லைனில் பதிவுசெய்த பிறகு விசேஷ எண்ணை பயன்படுத்தி, விண்ணப்பத்திற்கான பதிவு கட்டணத்தையும் தேர்வுக்கட்டணத்தையும் செலான் மூலமும் செலுத்தலாம். அல்லது நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவும் கட்டலாம்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் அமைக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப இலவச சேவை மையத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்து ஆர்.நடராஜ் கூறியதாவது:

குரூப்4- தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். மொத்தம் 10,793 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஜுலை 7-ந் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆன்லைனில் இலவசமாக விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவை மையங்கள் தொடங்கி உள்ளோம். இதுபோன்று மொத்தம் 500 மையங்கள் செயல்படுகின்றன. தேவைப்பட்டால் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இதுவரை டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அதிகபட்சமாக 104 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்ட, தாலுகா தலைமையிடங்களிலும் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, 245 மையங்களில் தேர்வு நடத்தப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே தேர்வு எழுதிக்கொள்ளலாம்.

குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 10 ஆயிரம் பேர் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பித்துள்ளார்கள். அதேபோல், `ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்'-ல் விண்ணப்பத்தை பதிவு செய்துகொண்டவர்கள் 40 ஆயிரம் பேர். குரூப்-4 தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டையும் ஆன்லைனிலேயே பெற்றுக்கொள்ளலாம். குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு நட்ராஜ் கூறினார்.



TNPSC விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 இலவச கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்,tnpsc online one time registration TNPSC விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 இலவச கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்,tnpsc online one time registration TNPSC விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 இலவச கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்,tnpsc online one time registration
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்
வி.ஏ.ஓ. பணிக்கு 4-வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கவுன்சிலிங் 5-ந் தேதி நடைபெற உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-கிராம நிர்வாக அதிகாரி

மேலும்...

 குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்
குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள 630 பணி இடங்களை நிரப்புவதற்காக 2-வது கட்ட கவுன்சிலிங் 7-ந் தேதி நடைபெறுகிறது.இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-2009-2011-ல் அடங்கிய காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு கடந்த 30.7.2011

மேலும்...

 எஸ்பிஐ வங்கிகளில் 7740 கிளார்க் பணியிடங்கள் : விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அசோசியேட் பாங்குகளில் 7740 கிளார்க் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப்

மேலும்...

 குரூப் 2 நேர்காணலில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
குரூப் 2 நேர்காணலில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப் 2 பணிகளுக்கான நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த ஜூன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in